புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


13 வய‌துடைய மாண‌வியை உற‌வினரான மாம‌னே தொட‌ர்‌ந்து க‌‌ற்ப‌ழி‌த்து வ‌ந்ததோடு, தனது
ந‌ண்ப‌ர்க‌ளு‌க்கு ‌விரு‌ந்தா‌க்‌கியு‌ள்ளா‌ர். இ‌ந்த கொடூர ச‌ம்பவ‌ம் கோவை‌யி‌ல்
நட‌ந்து‌ள்ளது பெரு‌ம் பரபர‌ப்பையு‌ம், அ‌தி‌ர்‌ச்‌சியையு‌ம் ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. இ‌ந்த வ‌ன்கொடுமை‌யி‌ல் ஈடுப‌ட்ட 5 பேரு‌ம் த‌ற்போது ‌சிறை‌யி‌ல் க‌ம்‌பி எ‌ண்ணு‌கி‌ன்றன‌ர்.

கோவை ராமநாதபுரம் என்.கே. தேவர் வீதியைச் சேர்ந்த கோ‌கிலா (13) எ‌ன்ற மாண‌வி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு கோ‌கிலா‌வின் பெற்றோர் ஒண்டிப்புதூருக்கு செ‌ன்று குடியே‌றின‌ர். ஆனா‌ல் கோ‌கிலா ராமநாதபுரத்தில் உள்ள தனது அத்தை ஈஸ்வரி வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு கோ‌கிலாவு‌க்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதா‌ல் அவரது மாமா கோபாலகிருஷ்ணன் (55) அந்த பகுதியில் உள்ள கம்பவுண்டர் பாலு (70) என்பவரிடம் அழைத்து சென்று‌ள்ளா‌ர். பாலு கோவை அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் வேலை பார்த்து ஓய்வு பெற்றவ‌ர்.

அ‌ப்போது, மாணவி கோ‌கிலாவுக்கு மயக்க ஊசி போட்ட பாலு, கோபாலகிருஷ்ண‌ன் துணையுட‌ன் மா‌றிமா‌றி கற்பழித்து‌ள்ளன‌ர். மயக்கம் தெளிந்து இர‌ண்டு பேரு‌ம் தன்னை சீரழித்தது கண்டு அழுது புலம்பினார். அதிர்ச்சி அடைந்த 2 பேரும் கோ‌கிலா‌விட‌ம், நடந்த சம்பவத்தை வெளியே சொ‌ன்னா‌ல் கொலை செய்துவிடுவதாக ‌மிர‌ட்டியு‌ள்ளன‌ர்.

இதனா‌ல் பய‌ந்துபோன கோ‌கிலா தன‌க்கு நே‌ர்‌ந்த கொடுமையை வெ‌ளி‌யி‌ல் சொ‌ல்லாம‌ல் இரு‌ந்து‌ள்ளா‌ர். இ‌ந்த ச‌ந்த‌ர்‌ப்ப‌‌த்தை பய‌ன்படு‌த்‌தி கொ‌ண்ட கேபால‌கிரு‌‌ஷ்ண‌ன், கோ‌கிலாவை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்து‌ள்ளா‌ர்.

மேலு‌ம், கோ‌கிலாவை பொள்ளாச்சிக்கு தேங்காய் பறிக்க செல்வதாக கூறி அழைத்து சென்றா‌ர் கோபால‌கிரு‌ஷ்ண‌ன், அ‌ங்கு அவரது நண்பர்கள் கருப்பசாமி (50),ராகம் கருப்பசாமி (55)ஆகியோ‌ர் கோ‌கிலா‌வி‌ன் க‌ற்பை சூறையாடியு‌ள்ளன‌ர்.

வெ‌ளி‌யி‌ல் செ‌ல்ல முடியாம‌ல் த‌வி‌‌த்து வ‌ந்த கோ‌கிலாவு‌க்கு மேலு‌ம் ஒரு இடி ‌விழு‌ந்தது. கோ‌கிலா க‌ற்ப‌ழி‌க்க‌ப்ப‌ட்ட ச‌ம்பவ‌‌ம் அவரது உறவினர் கார்த்திக் (19) என்பவரு‌க்கு தெ‌ரி‌ந்து‌ள்ளது. இதை வை‌த்து ‌மிர‌ட்டிய கா‌ர்‌த்‌தி‌க் ‌வீடு புகுந்து கோ‌கிலாவை பாலியல் பலாத்காரம் செய்து‌ள்ளா‌ர்.

இதனா‌ல் பொ‌ங்‌‌கி எழு‌ந்த கோ‌கிலா, கோவை மாநகர பொலிஸ் கமிஷனர் ‌வி‌ஸ்வநாதனை ச‌ந்‌தி‌த்து, தனது கற்பு சூறையாடப்பட்டது குறித்து கண்ணீர் மல்க புகா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

பொலிஸ் கமிஷன‌ரி‌ன் உத்தரவு படி, ராமநாதபுரம் பொலிசார், கோ‌கிலாவை க‌ற்பை சூறையாடிய மாமா கோபாலகிருஷ்ணன், பாலு, கருப்பசாமி, ராகம் கருப்பசாமி, கார்த்திக் ஆகியோரை கைது செய்து ‌சிறை‌யி‌ல் அடை‌த்த‌ன‌ர்.

5 பேரா‌ல் ‌‌சீர‌ழி‌க்க‌ப்ப‌ட்ட மாணவி கோ‌கிலா,கோவை அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள‌ர். த‌ற்போது இ‌ந்த ‌பிர‌ச்சனையை மாத‌ர் ச‌‌ங்க‌ம் கை‌யி‌ல் எடு‌த்து‌ள்ளதா‌ல், கு‌ற்றவா‌ளிகளு‌க்கு கடுமையான த‌ண்டனை வழ‌ங்கா ‌வி‌ட்டா‌ல் பெரு‌ம் போரா‌ட்ட‌ம் வெடி‌க்கு‌ம் எ‌ன்று மாத‌ர் ச‌ங்க‌ம் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top