லிபியாவில் சகோதரிகள் கற்பழிப்பு: 4 பேர் கைது
பாகிஸ்தானில் பிறந்த இரண்டு பிரிட்டிஷ் சகோதரிகள், துருக்கி நாட்டில் அரசு சாரா தொண்டு நிறுவனத்தில் சமூக ஆர்வலர்களாக பணியாற்றி வருகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று அவர்கள் தங்கள் தந்தையுடன் மத்தியத் தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள காசா பகுதிக்குச் செல்வதற்காக லிபியா நாட்டின் பெங்காசி விமானநிலையத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது வழியில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை கடத்திச் சென்று தந்தை முன்பாகவே கற்பழித்துள்ளனர்.
பின்னர் தன் பெண்கள் இருவரையும் அந்தத் தந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
புதன்கிழமையன்று, மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் லிபியா காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
நேற்று லிபியாவின் துணைப்பிரதமர் ஆவாத் அல் பரா தனது வலைத்தளக்குறிப்பில் இக்குற்றத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் 4 பேரை அரசு கைது செய்துள்ளதாகவும், மற்றொரு குற்றவாளி பற்றி விசாரித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கோரியதாகவும், விசாரணை முடிவுகள் வெளிப்படையாக அறிவிக்கப்படும் என்றும் உறுதி கூறியுள்ளார்.
இதுபோன்ற சமூக ஆர்வலர்களில் மேலும் சிலர் தாக்கப்பட்டுள்ளனர் என்று லிபிய நாட்டு அரசு ஊடகத் தகவல் வெளியிட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக