இந்தியாவில் தங்கையை பாலியல் தொழிலுக்கு விற்ற அக்கா கைது
இந்தியா-:மும்பை புறநகர்ப் பகுதியான அந்தேரி பகுதியில் தனது 12 வயது தங்கையை பாலியல் தொழிலுக்குத் தள்ள விற்பனை செய்த 24 வயது பெண்ணும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டனர்.
சாமினா தர்ஸி என்னும் அந்தப் பெண், தனது கணவருடன் ரூ.50 ஆயிரத்துக்கு தனது 12 வயது தங்கையை பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள கும்பலுக்கு விற்பனை செய்துள்ளார்.
இதனை அறிந்த அரசு சாரா தொண்டு நிறுவனம் ஒன்று இதனை போலீசில் தெரிவித்தது. அப்பெண்ணை மீட்க போலீஸார் ஒரு திட்டம் வகுத்தனர்.
முகம்மத் என்ற தரகரிடம் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நபர், சிறுமி தேவை என்று கூறச் சொல்லி, ரூ.70 ஆயிரத்துக்கு பேரம் பேசினர். வங்கதேசத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமியை படிக்க உதவி செய்வதாக அவரது சகோதரி மூலம் அழைத்து வந்தார் முகம்மத். தொண்டு நிறுவன நபரிடம் ரூ.50 ஆயிரம் முன்பணம் கேட்டுள்ளார். அதனை அந்தேரி ரயில் நிலையத்தில் வைத்துப் பெறும்போது, போலீஸார் முகம்மதை கைது செய்தனர்.
இதை அடுத்து, சிறுமியின் அக்கா மற்றும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை ஏப்.4ம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக