புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தென் ஆப்ரிக்கா பொலிசார் தமது வாகனத்தில் ஒரு நபரை கட்டி வைத்து இழுத்து சென்ற சம்பவத்தின் காணொளியானது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாரதியாக பணியாற்றும் 27 வயதான மொசாம்பிக் நாட்டு பிரஜையொருவர் தென்னாபிரிக்காவின், ஜொஹனர்ஸ்பேர்கிலிருந்து 25 மைல் தொலைவிலுள்ள டொவிடொன் பகுதியில் தனது வாகனத்தை நோபார்க்கிங் இடத்தில் நிறுத்தியிருந்தார்.

இதற்காக அந்நபரை கைது செய்த பொலிசார் அவரது கைகளை தமது வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்றனர். பொலிசாரின் இக்காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டுக்கு அங்கிருந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனினும் அதையும் மீறி பொலிசார் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பின்னர் அந்நபர் சிறைச்சாலையில் உயிரிழந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பொலிசாரினால் இழுத்துச் செல்லப்பட்ட நபர் சிறையில் உயிரிழந்திருப்பதால் இந்த பிரச்சினை பூதாகரமாகியுள்ளது.

இச்சம்பவத்தின் காணொளிதான் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்ரிக்க பொலிசாரின் இந்நடவடிக்கைக்கு பலர் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top