புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சீனாவில் உள்ள ஒரு பள்ளியில் நான்காம் மாடியிலிருந்து பள்ளிச்சிறுவர்கள் இறங்கிவரும்பொழுது தரைத் தளத்தின் கதவுகள் திறக்காமல்
இருந்ததால் கூட்டநெரிசலில் சிக்கி மிதிபட்டதில் நான்கு சிறுவர்கள் மரணமடைந்துள்ளனர்.
ஹியுபெல் மத்திய மாநிலத்திலுள்ள லாஒஹேகோஉ(Laohekou) என்ற நகரில் நேற்று அதிகாலை ஆறுமணிக்கு நடந்த இந்த விபத்தில் ஏழு மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதை தொடர்ந்து பள்ளி முதல்வர் உட்பட ஆறுபேர் கைதாகினர் மற்றும் 12 பேர் மீது வழக்குத்தொடரப்பட்டுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு சின்கியாங் பகுதியின் மேற்கில் உள்ள அக்சு(Aksu) என்ற சிறிய ஓர் ஆரம்பப் பள்ளியில் இதுபோன்ற ஒரு கூட்டநெரிசலில் 41 மாணவர்கள் மிதிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top