பாணந்துறைப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் 8 மாத குழந்தை ஆகிய மூவரின் சடலங்கள் நேற்று பொலிஸார்
மீட்கப்பட்டன.
தனது மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்த பின்னர், கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸாரின் புலனாய்வு விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
நிரோன் இந்திக (42 வயது) , சிரானி பத்மலதா (41 வயது) மற்றும் இவர்களின் 8 மாதப் பெண் குழந்தையொன்றுமே சடலங்களாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் கடற்படையில் கடமையாற்றியவர் என்றும் அதிலிருந்து விலகி தற்போது வாகன சாரதியாக வேலை செய்து வந்ததுடன் அவருடைய மனைவி ஓய்வு பெற்ற அரச ஊழியர் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தற்போது வசித்து வரும் வீட்டில் வாடகைக்கு குடியமர்ந்துள்ளனர்.
நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு முன் இவர்கள் இறந்திருக்க வேண்டுமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
சடலங்களை பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். பாணந்துறை தெற்கு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி
0 கருத்து:
கருத்துரையிடுக