புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். நாடக நடிகராக இருந்து திரைப்பட நடிகராக உயர்ந்தவர் டெல்லி கணேஷ். தமிழ்த்
திரையுலகிற்குக் கிடைத்த அட்டகாசமான நடிகர். ஆரம்பத்தில் நாயகனாக நடித்து வந்த இவர் பின்னர் குணச்சித்திரம், வில்லத்தனம், காமெடி என கலவையாக மாறி அதகளம் செய்தவர்.

எந்தப் பாத்திரமாக இருந்தாலும் அதில் சிறப்பாக பரிமளிக்கும் அபாரமான நடிகர். இவர் குடும்பத்துடன் ஆழ்வார்ப்பேட்டையில் வசித்து வருகிறார். 62 வயதான இவருக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நிலைமை ஸ்திரமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top