நியூயார்க் நகரில் உள்ள கில்பர்ட்டோ வால்லி (28) என்ற போலீஸ் அதிகாரிக்குத் தான் இந்த விசித்திர ஆசை. அதுவும் ஆன்லைனில் பரபரப்பு ஏற்படுத்தவே மனிதக் கறி சமைத்து சாப்பிட
விரும்பியுள்ளார்.
இதற்காக அவர் தனது மனைவி உள்ளிட்ட பல பெண்களைக் கடத்தி, கொலை செய்து, சமைத்து, சாப்பிட முயற்சி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, நியூயார்க் நகர போலீசார், வால்லி மீது வழக்கு பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கருதி, குற்றவாளி என நேற்று தீர்ப்பு வழங்கியது. விரைவில் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக