அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நடைபாதை வியாபாரம் செய்பவர்கள் என தெரியவந்துள்ளது.
பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர் ரக்கம, கேகொட பிரதேசத்தில் வசிக்கும் 69 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக