புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜோதிடம் பார்ப்பதாகவும் தோஷம் கழிப்பதாகவும் கூறி, பெண்களிடம் சில்மிஷம் செய்து வந்த சகோதரர்களை, பெண்கள் அமைப்பினர் கையும் களவுமாக பிடித்தனர்.

பீகாரை சேர்ந்த ஷியாம்லால் பாண்டே, சந்தோஷ் பாண்டே, மகாவித் பாண்டே மற்றும் ராஜ்குமார் பாண்டே ஆகியோர்கள் சகோதரர்கள் ஆவார்கள்.

இவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரின் யமுனா நகர் என்ற பகுதியில் சாமியார் போல உலா வந்தனர்.

இதேவேளையில் ஜோதிடம் பார்க்கிறோம், தோஷங்களை கழிக்கிறோம், அதன் மூலம் குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்துகிறோம் என இவர்கள் கூறியதால் ஏராளமான பெண்கள் ஜோதிடம் பார்க்கச் சென்றனர். அவர்களில் சில இளம் பெண்களை, பாண்டே சகோதரர்கள் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் அந்தப் பகுதியில் பிரபலமான பெண்கள் அமைப்பான தாமினி படையினர் என்ற பெண்கள் அமைப்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கூறினர்.

பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் பாண்டே சகோதரர்களை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்ட தாமினி அமைப்பினர், இளம் விதவைப் பெண் ஒருவரை சாமியார் சகோதரர்களிடம் அனுப்பி வைத்தனர். முன்னதாக அப்பெண்ணுக்கு பொட்டு, பூ, வளையல் எல்லாம் வைத்து ஜோதிடம் பார்க்க அனுப்பி வைத்தனர்.

நடந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் கூறியதாவது: பாண்டே சகோதரர்களில் மூத்தவரான ஷியாம்லால் பாண்டே இருந்த அறைக்குள் என்னை அனுப்பி வைத்தனர்.

என்னை தலை முதல் கால் வரை ரசித்துப் பார்த்த ஷியாம்லால், என் கையை பிடித்து இழுத்து வைத்து ரேகை பார்க்கும் பாவனையில் சில்மிஷம் செய்தான்.

உன் கணவர், உன்னை தினமும் அடித்து நொறுக்குவாரே? என கேட்டான். நானும், உண்மை என்பது போல தலையாட்டினேன். உனக்கும், உன் கணவனுக்கும் தோஷம் உள்ளது. அவனுக்கு முன்பாக நீ இறந்து விடுவாய். தோஷம் கழிக்க வேண்டும். அதற்கு, 2,000 ரூபாய் தர வேண்டும் என்றான்.

மேலும் இப்போதே தோஷம் கழித்து விடுவேன். அதற்கு முன், சில அங்க அடையாளங்களைப் பார்க்க வேண்டும் எனக் கூறி என் உடலை பார்க்க தொடங்கினான்.

இதையடுத்து ஏற்கனவே கூறி வைத்தது போல் வெளியே இருந்த வாகினி படையினருக்கு தகவல் கொடுத்தேன்.

அவர்கள் உள்ளே புகுந்து செருப்பு, துடைப்பத்தால், ஷியாம்லாலை "பின்னி"எடுத்து, கரும்புள்ளி போட்டு, ஊர்வலமாக பொலிஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர் என அந்தப் பெண் கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top