புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தெலுங்கு படங்களில் ஆபாசமாக நடிப்பதாக அனுஷ்கா, பிரியாமணி மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

சமூக சேவகர் சுப்புடு என்பவர் ஐதராபாத் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

அனுஷ்காவும் பிரியாமணியும் அரை குறை ஆடையில் கவர்ச்சியாக நடிக்கின்றனர் என்றும் அவர்கள் படங்களை பார்க்கும் இளைஞர்கள் கெட்டுப்போக வாய்ப்பு உள்ளது என்றும் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி பொலிசுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் பிரியாமணியும், அனுஷ்காவும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதற்காக இருவரும் ஆபாசமாக நடித்த படங்களை பொலிசார் பார்த்து வருகின்றனர். எந்தெந்த படங்களில் ஆபாசமாக வருகிறார்கள் என்ற விவரங்களையும், காட்சிகளையும் சேகரிக்கிறார்கள். ஓரிரு நாட்களில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

இது குறித்து அனுஷ்கா கூறுகையில், நான் ஆபாசமாக நடிப்பதாக வழக்கு போடுவது என்பது விளம்பர யுக்தி. இதற்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன்.

எனது முழு கவனமும் நடிப்பில்தான் இருக்கிறது என்றும் ‘ருத்ரம்மா’ என்ற புராண படத்தில் தற்போது நடிக்கிறேன் எனவும் கோபமாக கூறினார்.

பிரியாமணி கூறுகையில், நான் ஆபாசமாக நடிக்கவில்லை. விளம்பரத்துக்காகவே புகார் கூறப்பட்டு உள்ளது. வழக்கு போட்டவர் குறிப்பிட்டுள்ள படத்தில் நான் சேலை உடுத்தி வருகிறேன்.

அரைகுறை ஆடை எதுவும் அணியவில்லை என்றும் உண்மை தெரியாமல் என் மேல் குற்றம் சாட்டப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top