புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருமணம் செய்து கொள்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. பேச்சிலர் வாழ்க்கையை சொர்க்கம் நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சியாகத்தான் இருக்கும் வேறு வழியில்லை.
திருமணம் செய்துகொண்டால் என்னென்ன நன்மை படியுங்களேன்.

வருமானம் அதிகமாகும்

பேச்சிலர் வாழ்க்கையில் என்னதான் சம்பாதித்தாலும் சேர்த்து வைப்பது சிரமம். அதே திருமணத்திற்கு பின்னர் என்றால் குடும்ப வரவு செலவு மனைவியின் கைக்கு போய்விடும் செலவு செய்யவேண்டியது போக மீதியை சேமித்து வைத்துவிடுவார். மனைவியும் வேலைக்கு போனால் இரட்டிப்பு வருமானம்தான்.

மதிப்பு கூடுதலாகும்

குடும்பஸ்தன் என்றாலே சமூகத்தில் கூடுதல் மதிப்புதான். எதையும் கேட்டு செய்வார்கள். அதேபோல் பணிபுரியும் இடத்திலும் பெர்பாமென்ஸ் அதிகமாகி புரமோசன் கூட கிடைக்குமாம். இது அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பிரச்சினைகள் தீர்வு கிடைக்கும்

பேச்சிலர் வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் தனியாக மண்டையை பிய்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் திருமணம் முடிந்த பின்னரோ மனைவியுடன் கலந்து ஆலோசித்து பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காணலாம்.

புற்றுநோய் வராதாம்

பேச்சிலராக இருப்பவர்களுக்கோ, விவாகரத்தானவர்களுக்கோ புற்றுநோய் வரும் வாய்ப்பு 11முதல் 16 சதவிகிதம் அதிகம் என்கிறது ஒரு ஆய்வு முடிவு. அதுவே திருமணம் ஆனவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவாம். அமெரிக்காவின் மேரிலேண்ட் மர்லீன் பல்கலைக்கழக மாணவர்கள், பால்டிமோர் ஸ்டீவர்ட் கிரீனிபாம் புற்றுநோய் மையத்துடன் இணைந்து சமீபத்தில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.

 நுரையீரல் புற்றுநோயின் 3ம் நிலையில் உள்ள மற்றும் புற்றுநோய்க்கான கீமோ‌தெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சையை, 10ஆண்டுகளுக்கு முன் பெற்ற 168 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், திருமணமாகாதவர்களைவிட, திருமணமானவர்கள்3ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ்வது கண்டறியப்பட்டது. திருமணமாகாத ஆண்களை ‌விட, திருமணமான பெண்களுக்கு 46 சதவீத‌ உயிர் வாழும் திறன் அதிகமாக பெற்றுள்ளது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

 எனவே திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பல்வேறு நன்மைகள் இருப்பதால் பேச்சிலர்கள் இனியும் தள்ளிப்போடாமல் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்கின்றனர் ஆய்வாளர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top