பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் முகத்தில் முட்டை வீசப் போவதாக முகப்புத்தகத்தில் எழுதிய பெண்ணிடம் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
பிரிட்டனில் கென்ட் மாகாணத்தில் உள்ள கேன்டர்பரி சபையின் தலைமை பிஷப்பாக, ஜஸ்டின் வெல்பி என்ற பாதிரியார் கடந்த 21ம் திகதி அன்று பதவியேற்றார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், கென்ட் மாகாணத்துக்கு வந்துள்ளார்.
அவரது வருகை குறித்து விமர்சித்து டெப்ரா பர்ட் என்ற பெண் தனது முகபுத்தகத்தில், அவரது முகத்தில் முட்டையை வீச விரும்புகிறேன், இதில் நான் தேர்ந்தவள். இதுவரை என் குறி தப்பியதில்லை என்று எழுதியிருந்தார்.
இதையடுத்து, அந்த பெண்ணின் முகவரியை கண்டுபிடிக்கும் பணியில் ஒரு மாத காலமாக ஈடுபட்ட பொலிசார், நிகழ்ச்சி நடப்பதற்கு முதல் நாள் ஒருவழியாக அவரது வீட்டை கண்டுபிடித்து விசாரணை நடத்தினர்.
இது குறித்து டெப்ரா கூறுகையில், நான் தீவிரவாதி பெண் அல்ல, பிரதமரின் கொள்கைகளால் அதிருப்தி அடைந்த சாதாரண பெண். அவரது வருகை குறித்து நகைச்சுவையாக தான் கருத்து தெரிவித்தேன்.
இதுபோன்ற விடயங்களுக்கு, பொலிசார் முக்கியத்துவம் தராமல் உண்மையான குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக