அமெரிக்காவின் ஹாம்ஸ் நிறுவனம், 100 வீதம் சுத்தமான முதலை தோலினால் டி-சர்ட் ஒன்றை தயாரித்துள்ளது.
இந்த சட்டை நியூயார்க்கில் உள்ள மாடிசன் அவென்யூவில் உள்ள வணிக வளாகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டது. அதை ஏராளமானவர்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
அதற்கு காரணம் முதலை தோலினால் தயாரிக்கப்பட்ட அந்த ஒரு டி-சர்ட்டின் விலை 91,500 டொலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நியூயார்க் நகரில் விற்பனைக்கு வைக்கப்பட்ட டி-சர்ட்டுகளில் இதுதான் மிக அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக