நாத்தாண்டிய - மேல்கொட்டராமுல்ல பகுதியில் நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பெற்றோருடன் உறவினர்கள் வீட்டுக்குச் சென்று விளையாடிக் கொண்டிருந்த வேளை, வாகனம் பழுதுபார்க்கும் இடத்திற்குச் சொந்தமான கழிவு அகற்றும் குழிக்குள் சிறுமி தவறி விழுந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமிக்கு வயது 04 ஆகும்.
சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறுகிறது.
நாத்தண்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக