புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நயன்தாராவை விட்டு பிரிந்த பிரபுதேவா இப்போது அசினை தனது கேர்ள் ப்ரண்டாக்கியிருப்பதாக பாலிவுட் வட்டாரம் பரபரப்பு செய்தி வாசிக்கிறது. மும்பையில் இருவரும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வரும் இவர்கள் அடிக்கடி
சந்தித்து சினிமா பற்றிய விசயங்களை பரிமாறிக்கொள்கிறார்களாம். அதோடு, கடந்த சில தினங்களுக்கு முன்பு கனடாவில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவுக்கு இருவரும் ஜோடியாகவே விசிட் அடித்துள்ளனர். அப்போது இருவரும் ஜோடி போட்டு போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து அமர்க்களம் செய்துள்ளனர்.

இதையடுத்து, மும்பை வட்டாரங்களில் பிரபுதேவா- அசின் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோக்கள் பரபரப்பு கூட்டியுள்ளதாம். அதோடு, பிரபுதேவாவின் அடுத்த ஜோடி அசின் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளதாம். ஆனால் இதற்கு பிரபுதேவாதரப்பில் இருந்து நோ கமெண்ட்ஸ். ஆனால் அசின்தான் முந்திக்கொண்டு, நாங்கள் இருவரும் ப்ரண்ட்ஸ் மட்டுமே. அதனால் அடுத்த ஜோடி என்றெல்லாம் கதை கட்ட வேண்டாம் என்று மறுப்பு கூறியிருக்கிறார்.

இருப்பினும், சமீபத்தில் பிரபுதேவா அளித்த பேட்டியொன்றில், சினிமாவில் முன்னணி இயக்குனராகி விட்ட எனக்கு, ஒரு துணை இல்லாதது பெரிய வருத்தத்தையும், ஏக்கத்தையும கொடுத்துள்ளது என்று தெரிவித்திருந்ததால், அசினை தனது அடுத்த ஜோடியாக்கி விடுவார் என்று மும்பை மீடியாக்கள் அழுத்தம் திருத்தமாக செய்தி வாசித்து வருகின்றன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top