கொலிவுட்டில் பல ஹிட்டான படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரவி கே.சந்திரன் இயக்கும் முதல் படம் யான்.
ஆய்த எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால், பாய்ஸ், 7ஆம் அறிவு போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ரவி கே.சந்திரன்.
இவர் இயக்கும் முதல் படம் யான். இது பற்றி ரவி கே.சந்திரன் கூறியது: தன்னைத்தானே அறியும் நேரம் ஒவ்வொருவருக்கும் வரும். அப்படியொரு தருணம் ஹீரோவுக்கு வருகிறது.
அப்போது காதலும் வருகிறது. அத்துடன் பகையும் வருகிறது. இதன் தீர்வு என்ன என்பது கிளைமாக்ஸ்.
பத்திரிகை செய்தி ஒன்றை பார்த்து பல வருடங்களுக்கு முன்பே இக்கதையை உருவாக்கினேன்.
ஜீவாவிடம் கூறியபோது அவருக்கு பிடித்திருந்தது. ராதாவின் இளைய மகள் துளசி நாயகியாக நடிக்கிறார்.
இவர்களுடன் நாசர், ஜெயபிரகாஷ், நவாப் ஷா, ஹாலிவுட் நடிகர் டேனியல், தம்பி ராமையா, சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகள் இதுவரை காணாத வகையில் படமாக்கப்படுகிறது.
ஸ்டன்ட் மாஸ்டர் அர்மின் சாயுர்(ஜெர்மன்). கேச்சா கம்பக்டி (தாய்லாந்து), ஹாலிவுட் ஜய்க்கா ஸ்டன்ட் குழு என உயர்தர ஸ்டன்ட் தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக