சின்னப்பூவே மெல்லப்பேசு, பூந்தோட்டக்காவல்காரன் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் ராம்கி. தென்னிந்திய மொழிகளில் பரவலாக நடித்து வந்த அவரது மார்க்கெட், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு
டவுனானது.
ஆனபோதும், சில நடிகர்களைப்போன்று குடியும் குடித்தனமுமாகாமல், தொடர்ந்து சினிமாவில் நடிக்க முயற்சி எடுத்து வந்த ராம்கி, தனது உடம்பையும் இடைவிடாத உடற்பயிற்சி மூலம் மெயின்டெய்ன் பண்ணி வைத்திருந்தார்.
அதன்காரணமாக, பிரியாணி படத்தில் நடிப்பதற்கு முதலில் மைக் மோகனை பேசிய வெங்கட்பிரபு, அவரது உடம்பில் முதிர்ச்சி தெரிவதைப்பார்த்து, இப்போது ராம்கியை புக் பண்ணியிருககிறார். அதைத்தொடர்ந்து, மாசாணி, வாய்மை ஆகிய படங்களுக்கும் ராம்கியை அடுத்தடுத்து புக் பண்ண மீண்டும் பிசியாகி விட்டார்.
இந்த நிலையில், தொடர்ந்து சினிமாவில் தன்னை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக, தற்போது நான்குமறை என்றொரு படத்தையும் இயக்குகிறார் ராம்கி. இதுபற்றி அவர் கூறுகையில், சினிமாவில் நடிகராவதற்கு முன்பே நான் திரைப்படக்கல்லூரியில் பயின்றவன். அதனால் படம் இயக்க வேண்டும் என்ற ஆர்வம் ஆரம்பத்திலேயே இருந்தது.
ஆனால் நடிப்பில் பிசியாகி விட்டதால் அப்போது என்னால் படம் இயக்க முடியவில்லை. இப்போது ரீ-என்ட்ரி ஆகியிருப்பதோடு, சினிமாவில் தொடர்ந்து ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால்தான், எனக்குள் இருந்த இயக்குனர் ஆசையை நிறைவேற்ற இப்போது களமிறங்கியுள்ளேன் என்கிறார் ராம்கி.
0 கருத்து:
கருத்துரையிடுக