புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


70வது வயதான “Thai Ngoc” என்ற விசேட மனிதரைப்பற்றியே இன்று பார்க்கப்போகிறோம். Hai Ngoc என்று அறியப்பட்ட இவர் கடந்த 40 வருடமாக தூங்குவதில்லை! ஆம் 1973 ஆம் ஆண்டு இவரிற்கு ஏற்பட்ட ஒருவகை காய்ச்சலின் பின்னர் இவரால் நித்திரை செய்யமுடிவதில்லை.
மலைக்கிராமத்தைச்சேர்ந்த இவர் சுமார் 50கிலோகிராம் நிறையுள்ள பொருட்களை தினமும் 4 கிலோமீட்டர்கள் காவிச்செல்கிறார். எனினும் இவரின் தூக்கமற்ற நிலையால் இவரிற்கு எந்த விதமான உடல் ரீதியான பாதிப்பும் ஏற்படவில்லை.

6 பிள்ளைகளுடன் விவசாயம் செய்துவரும் இவர் இரவு நேரங்களை தனது தோட்டங்களை திருடர்களிடம் இருந்து பாதுப்பதில் செலவளித்துவருகிறார். சாதரன மனிதர்களால் இப்படி நித்திரை இல்லாமல் வாழமுடியாது. கடந்த 2008 ஆம் ஆண்டில் டொனி ரைட் (Tony Wright) 266 மணி நேரம் தொடர்சியாக தூங்காமல் இருந்து கின்னஸ் சாதனை புரிந்திருந்தார். ( மேலதிக நேரம் அவர் தூங்காமல் இருப்பதற்கு அனுமதிக்கபடவில்லை.

காரணம் அவரின் உடல் நிலை மோசமடையத்தொடங்கியிருந்தது.) சாதனையின் பின்னர் அடுத்த இரண்டு நாட்களுக்கு அவரின் தூக்கம் 15 மணி நேரங்கள் நீடித்ததாம்.

சாதாரன ஒரு மனிதனால் 11 நாட்கள் தூங்காமல் இருப்பதே சாதனையாக இருக்கும் போது, 40 வருடங்கள் தூங்காமல் இருக்கும் Thai Ngoc ஒரு விசேட மனிதரே.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top