புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அதிநவீன சொகுசு வாகனமொன்றுக்குள் பதினொரு நாய்களை ஏற்றிக்கொண்ட பெண்ணொருவர், நேற்றிரவு முழுவதும் நாய்களுடன் பூட்டிய காருக்குள் கழித்த சம்பவம்
தென்னிலங்கையின் மாத்தறை நகரில் நடைபெற்றுள்ளது.
மாத்தறை நகரை அண்மித்த வல்கம சந்தியில் நேற்றிரவு குறித்த பெண் நவீன சொகுசுக் காரில் நாய்களையும் ஏற்றிக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்.

அவரது நடை, உடை மற்றும் அவரது செயற்பாடுகளில் சந்தேகம் கொண்ட அப்பிரதேச மக்கள் கார் சக்கரங்களின் காற்றைத் திறந்து விட்டுள்ளனர்.

இதற்கிடையே அப்பெண்ணின் அழகான தோற்றம், உடம்பை வெளிக்காட்டிய கவர்ச்சி குறித்த தகவல் பரவியதன் காரணமாக அப்பகுதி இளைஞர்கள் காரைச் சுற்றி சூழந்து கொள்ளத் தொடங்கினர்.

இதற்கிடையே சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டபோதும் இன்று காலை வரை பொலிசார் சம்பவ இடத்துக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே நேற்று மாலை வல்கம சந்திக்கு வந்து காரை நிறுத்திய பிரஸ்தாப பெண், காரின் கண்ணாடிகளைப் பூட்டிக் கொண்டு தனது நாய்களுடன் காருக்குள்ளேயே நேற்றைய இரவைக் கழித்துள்ளார்.

காருக்குள் இருந்த நாய்களின் கர்ண கடூரத் தோற்றம் காரணமாக ஒரு கட்டத்தில் பொதுமக்கள் காரை நெருங்கிச் செல்வதைத் தவிர்த்து, தூரத்தில் நின்றபடி வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.

இந்நிலையில் நாய்களுடன் இரவைக் கழித்த அழகியைக் காணும் ஆவலில் காரைச் சுற்றிலும் ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் சூழ்ந்து கொண்டதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அவ்விடத்துக்கு வந்த போக்குவரத்துப் பொலிசார், காரின் சக்கரங்களுக்கு காற்றை நிரப்பி அப்பெண் அங்கிருந்து புறப்பட்டுச் சொல்ல உதவியுள்ளனர்.

இச்சம்பவம் மாத்தறைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top