புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

70வயதான மூதாட்டியின் கொலை தொடர்பாக அவரது பேரன் கொஸ்லாந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


பேரனின் கத்தி வெட்டுக்கு இலக்கான மூதாட்டி கொஸ்லாந்தை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பதுளை அரசினர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர கிகிச்சைகுட்பட்ட போதிலும், சிகிச்சை பயனளிக்காமல் மரணமாகியுள்ளார்.

கொஸ்லாந்தை ஊவா மாவலகம என்ற கிராமத்தைச் சேர்ந்த 70 வயது நிரம்பிய ஏ.எம்.பிரேமாவதி என்ற மூதாட்டியே இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டவராவார்.

இதுதொடர்பாக கொஸ்லாந்தை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு மூதாட்டியின் பேரனை கைது செய்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பெரிய கத்தியொன்றையும், பொலிஸார் மீடடுள்ளனர்.

மூதாட்டி தமது பேரனுக்கு பணம் கொடுக்க மறுத்தமையினாலேயே ஆத்திரம் கொண்ட பேரன் கத்தியால் வெட்டி படுகொலை செய்ததாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top