புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சீனாவில் உள்ள பெண் ஒருவர் போதைக்கு அடிமையாகி தனது இரண்டு குழந்தைகளுக்கும் ஒழுங்கான உணவு அளிக்காமல் அவர்களை பட்டினிபோட்டு கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சீனாவில் உள்ள நான்ஜிங் புறநகரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 4 மற்றும் 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.

இப்பெண்ணின் கணவர் போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். போதைக்கு அடிமையான இந்த பெண் அவரது குழந்தைகளை சரியாக கவனித்து கொள்ளாமல் இருந்தார்.

தொடர்ந்து பல நாட்களாக அந்த பெண் குழந்தைகளை தனிமையில் வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்றுவிடுவாரென்று அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அந்த பெண் மற்றும் குழந்தைகள் இருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்த பார்த்தபோது 4 மற்றும் 2 வயது குழந்தைகள் இருவரும் இறந்த நிலையில் இருந்தனர். அவர்களது சடலங்களும் அழுக தொடங்கியிருந்தன.

உடனடியாக அவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், குழந்தைகள் பசியால் இறந்திருக்ககூடுமென தெரிவித்துள்ளனர். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top