கடைக்குச் செல்வதற்காக தாயினால் வீட்டுக்குள் தனியாக அடைக்கப்பட்ட பின்னர் 5 வயதான சிறுமி ஒருவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட சம்பமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் ஒர்லீன்ஸ் நகரிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, 28 வயதான லேடரிகா ஸ்மித் என்ற பெண் தனது மகளை தனியா வீட்டினுள் வைத்து பூட்டிவிட்டு கடைக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த சிறுமி, தாயின் துப்பாக்கி கண்டெடுத்துள்ளர். பின்னர் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் சிறுமியின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது.
பின்னர் தாய் வீட்டுக்கு வந்த போது அவரது மகள் இரத்தம் வடிந்த நிலையில் கட்டிலில் கிடந்துள்ளார். இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு அச்சிறுமி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை ஸ்மித் மீது பொலிஸாரினால் இரண்டாம் நிலை குற்றவாளியாக வழக்குத் தொடரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக்காலமாக அமெரிக்காவில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:
கருத்துரையிடுக