புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அமெரிக்காவைச் சேர்ந்த இரு பெண்கள் 1915ஆம் ஆண்டில் ஆற்றினுள் வீசிய மெசேஜ் அடங்கிய போத்தலொன்று 97 வருடங்களின் பின்னர் சாரதி ஒருவரினால் கண்டெடுக்கப்பட்ட சுவாரஷ்யமான சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.


அமெரிக்காவின் மிசிகன் மாநிலத்தில் அமைந்துள்ள சென் க்லெயர் எனும் ஆற்றிலேயே குறித்த போத்தல் மீட்கப்பட்டுள்ளது.

1951ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த ஆறுடன் சேர்த்து டஸ்மூ எனும் கேளிக்கை பூங்கா ஒன்று செயற்பட்டுள்ளது. அங்கு 1915ஆம் சுற்றுலா மேற்கொண்ட அப்போது 17 வயதாக இருந்த செலினா ப்ரம்ஸ்டெலர் மற்றும் 23 வயதான ரில்லி எஸ்பர் என்ற இரு பெண்களே இப்போத்தலை சென் க்லெயர் ஆற்றினுள் வீசியுள்ளார்.

அன்று டஸ்மூ பார்க்கிற்கு சென்ற பயணம் இனிமையாக அமைய அதனை ஞாபகமிக்க நாளாக மாற்றுவதற்காக “டஸ்மூவில் மிகவும் இனிமையான நேரமாக அமைந்தது” என்ற மெசேஜினை நுழைவுச் சீட்டின் பின்புறம் எழுதி அதனை ஒரு போத்தலில் இட்டு ஆற்றினுள் வீசியுள்ளனர்.

இச்சம்பவம் நடைபெற்று சுமார் 100 வருடங்களாகும் நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக அப்போத்தலை ஆற்றின் 30 மீற்றர் தூரத்திலிருந்து டேவ் லீண்டர் என்ற சாரதி கண்டெடுத்து வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஆனால் போத்தலினை டேவ் திறக்கவில்லை. ஈரமான போத்தல் காய்ந்து தானாக தக்கை திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உள்ளிருந்த குறித்த தகவல் அடங்கிய நுழைவுச்சீட்டை பார்த்துள்ளார் டேவ்.

இந்த சீட்டில் குறித்த மெசேஜ் தவிர எழுதியவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது தாய், தந்தையின் பெயர், திருமணம் அத்துடன் தொழில் போன்ற விடயங்களையும் எழுதியுள்ளனர் செலினாவும் எஸ்பாவும்.

இதுவொரு சுவாரஷ்யமான போத்தல் சம்பவமென போத்தல்கள் தொடர்பாக ஆராயச்சிகள் மேற்கொள்ளும் மெட்ரோபொலிடின் போத்தல் கழக தலைவர் மைக்கேல் தெரிவித்துள்ளார். மேலும் போத்தல் உரிமையாளர்களின் உறவுக்காரர்களை தேடி வருவதாக அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top