நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே சொல்லச் சொல்லக் கேட்காமல் கள்ளக்காதலில் திளைத்திருந்த மனைவியை சரமாரியாக வெட்டிக் கொன்றார் கணவர். சிவகிரி அருகே உள்ள தென்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. 32
வயதான இவருடைய மனைவி முத்துலட்சுமி. இருவரும் 8 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்தனர். இருஅழகான ஆண் குழந்தைகளும் பிறந்தனர்.
கருப்பசாமி திருப்பூரில் தங்கியிருந்து வேலை பார்த்தார். குடும்பத்தைக் கூட்டிச் சென்றால் செலவுகளை சமாளிக்க முடியாதே என்பதற்காக குடும்பத்தை தென்மலையில் வைத்து விட்டு இவர் மட்டும் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார்.
சில தினங்களுக்கு முன்பு அவர் ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று இரவில் அவர் கண் விழித்து பார்த்த போது அருகே படுத்திருந்த மனைவியைக் காணவில்லை. எங்கே? என்று அவர் தேடிய போது வீட்டுக்கு அருகே ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் சத்தம் கேட்டுள்ளது. அங்கு போய்ப் பார்த்தபோது தனது மனைவி இன்னொருவருடன் உல்லாசத்தில் மூழ்கியிருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார்.
கொலைவெறியில் அந்த வாலிபரைப் பிடித்து சரமாரியாக அடித்தார். ஆனால் கருப்பசாமியிடமிருந்து தப்பி ஓடி விட்டார் அந்த வாலிபர். அதன் பின்னர் மனைவி பக்கம் திரும்பிய கருப்பசாமி, வீட்டில் கிடந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டித் தள்ளி விட்டார். இதில் கழுத்து, தலை மற்றும் உடல் முழுவதும் வெட்டு விழுந்து ரத்த வெள்ளத்தி்ல் பிணமானார் லட்சுமி.
அதன் பின்னர் போலீஸாரிடம் போய் சரணடைந்தார் கருப்பசாமி. அவர் விசாரணையின் போது கொடுத்த வாக்குமூலத்தைக் கேட்டு போலீஸாரே பரிதாபப்பட்டனர்.
எப்பப் பார்த்தாலும் செல்போனில்..
எனது மனைவி எப்போதும் செல்போனில் பேசியபடியே இருப்பார். நான் ஊரிலிருந்து பேச முயற்சிக்கும்போதெல்லாம் பிசி என்றே வரும். ஆனால் நான் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. ஊருக்கு வரும்போதும் கூட அவர் போனிலேயே இருப்பார். அப்போதும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.
இந்த நிலையில்தான் எனக்கு சில தகவல்கள் கிடைத்தன. எனது மனைவிக்குத் தவறான தொடர்புகள் இருப்பதாக அவை கூறின. கடந்த நான்கு வருடமாக ொரு வாலிபருடன் அவர் தவறான தொடர்பில் இருந்து வந்துள்ளார். நான் ஊரில் இல்லாதபோது இருவரும் அடிக்கடி சந்தித்து சந்தோஷமாக இருந்துள்ளனர். இதை நான் உறுதிப்படுத்திக் கொண்டேன்.
அதன் பின்னர் எனது மனைவியை உட்கார வைத்து புத்திமதி கூறினேன். 2 குழந்தைகளுக்கு நீ தாய். இந்த நிலையில் இப்படி செய்வது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதிக்கும். எல்லாவற்றையும் விட்டு விடு என்று கூறினேன். ஆனால் எனது மனைவி கேட்கவில்லை. இதையடுத்து அவருடை தந்தை ராமர் மூலமாகவும் அட்வைஸ் செய்தேன். அப்போதும் அவர் கேட்கவில்லை.
இந்த நிலையில் தான் ராத்திரி நான் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டை விட்டு வெளியேறி அந்த நபருடன் வீ்ட்டுக்குப் பக்கத்திலேயே அசிங்கமாக நடந்து கொண்டிருந்தார் எனது மனைவி. இதனால்தான் கோபத்தில் வெட்டி வீழ்த்தி விட்டேன் என்றார்.
போலீஸார் கருப்பசாமியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். முத்துலட்சுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது… அவர்கள் பெற்ற இரு குழந்தைகளும் அனாதைகளாக நிற்கிறார்கள்!

0 கருத்து:
கருத்துரையிடுக