கள்ளக்காதலை முடித்துக் கொள்ள விரும்பினார் ஒரு பெண். ஆனால் அவருடன் தொடர்பு வைத்திருந்த அவரது கணவரின் தம்பி, தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் தலையில் கல்லைப் போட்டுக் கொன்று விட்டார்.
பென்னாகரம் அருகே உள்ளது அத்திமரத்தூர் காட்டுவளவு கிராமம். இப்பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். விவசாயி ஆவார். இவரது அண்ணன் மனைவி மாதாம்பூ. முருகேசனுக்கும், மாதாம்பூவுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாம்.
இந்த நிலையில் மாதம்பூ தனது மகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்குப் பின்னர், கொழுந்தனுடன் உறவைத் தொடர சங்கடப்பட்டு விலக ஆரம்பித்துள்ளார் மாதாம்பூ. ஆனால் முருகசேன் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த மாதாம்பூ, சில நாட்களுக்கு முன்பு முருகேசனை சின்னம்பள்ளி கிராமத்திற்குக் கூட்டிச் சென்றார். அங்கு மது வாங்கிக் கொடுத்தார். முருகேசன் குடித்தார். போதை ஏறியது. பின்னர் அவரை அருகில் உள்ள மலைப் பகுதிக்குக் கூட்டிச் சென்றார். அங்கு வைத்து முருகேசன் தலையில் பெரிய கல்லைப் போட்டுக் கொன்று விட்டார்.
முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் ஹாயாக தனது வீட்டுக்குப் போய் விட்டார் மாதாம்பூ. போலீஸார் நடத்திய விசாரணையில் இந்த விவரம் தெரிய வந்தது. அன் பின்னர் மாதாம்பூவைக் கைது செய்தனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக