பக்கத்து வீட்டு, 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கொடூரமாக கொன்ற, 55 வயது தந்தையை, போலீசில் பிடித்து கொடுத்த, 25 வயது மகன், கோர்ட்டிலும் சாட்சியம் கூறி, தந்தைக்கு மரண தண்டனை பெற்றுத் தந்துள்ளார்.
ஏழை தொழிலாளி:
மும்பை அருகே உள்ள நவிமும்பை பகுதியில் வசித்து வந்த ஏழை தொழிலாளி தம்பதிக்கு, மூன்று பெண் குழந்தைகள். அவர்களின், 5 வயது பெண் குழந்தை, கடந்த ஜனவரி, 22ம் தேதி திடீரென காணாமல் போனது.
பெற்றோர் வேலைக்காக வெளியே சென்றிருந்த போது, மூத்த சகோதரிகளுடன் வீட்டில் இருந்த குழந்தை, விளையாட வெளியே வந்த போது, பக்கத்து வீட்டில் வசித்த, தத்தாத்ரே ரோக்தே, 55, என்பவன், அந்தக் குழந்தையை, தன் வீட்டுக்கு தூக்கிச் சென்று, பலாத்காரம் செய்தான்.
இதில், அந்தக் குழந்தை குற்றுயிரும், குலை உயிருமாக இருந்த போது, தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளான்; அதன் பிறகும் வெறி தணியாமல், பச்சிளம் குழந்தை என்று கூட நினைக்காமல், மீண்டும் பலாத்காரம் செய்துள்ளான்.
பிணத்தை வெளியே தூக்கி எறிந்து விட்டு, ஒன்றும் தெரியாதவன் போல இருந்து விட்டான்.இந்த கொடூரம் நிகழ்ந்த போது, தத்தாத்ரேயின் மனைவி மற்றும் மகன் வெளியே சென்றிருந்தனர். அவர்கள் வீடு திரும்பிய போது, அந்த பகுதியே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.
சந்தேகம் :
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குற்றவாளியை நெருங்க முடியவில்லை. இந்நிலையில், தந்தையின் நடத்தையில் சந்தேகம் அடைந்த, தத்தாத்ரேயியின், 25 வயது மகன், தன் தந்தை தான் அந்த கொடூரத்தை செய்திருக்க வேண்டும் என, நம்பினான்.
ஏனெனில், சில ஆண்டுகளுக்கு முன், அவர்களின் சொந்த கிராமத்தில், இது போன்ற கொடூரத்தை தத்தாத்ரே செய்ததால், தண்டிக்கப்பட்டு, கிராமத்தை விட்டு வெளியேறி, மும்பையில் குடியேறியவர்கள் தான் அவன் மற்றும் குடும்பத்தினர்.
மகனின் விசாரணையில், உண்மையை ஒப்புக் கொண்டான் தத்தாத்ரேயா. தந்தை என்றும் பாராமல், அவனின் கை, கால்களை கட்டி, அறையில் போட்டு பூட்டி, போலீ”க்கு தகவல் கொடுத்தார், மகன்.
இந்த வழக்கு, விரைவாக விசாரிக்கப்பட்டது. சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட, பாலியல் குற்றங்களில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டப்படி, தத்தாத்ரேயா மீது வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடந்தது.
தடயங்கள்:
விசாரணையின் போது, அவனின் மகனும், மனைவியும், தத்தாத்ரேயாவை குற்றவாளி என்று கூறியதோடு, கொலை மற்றும் பலாத்காரத்தின் தடயங்களையும் உறுதி செய்தனர்.நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கொடூர மனம் படைத்த, தத்தாத்ரேயாவுக்கு, மரண தண்டனை விதித்து, கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பிரகாஷ் மாலி உத்தரவிட்டார்.

0 கருத்து:
கருத்துரையிடுக