புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

குப்பை மேட்டில் கைவிடப்பட்டு உயிருக்குப் போராடிய குறைமாத குழந்தை ஒன்றை உயிருடன் மீட்ட நாய் ஒன்று கௌரவிக்கப்பட்ட சம்பவமொன்று தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.


கம்னர்ட் என்பவருக்குச் சொந்தமான புய் என்ற நாயே மேற்படி குழந்தையைக் காப்பாற்றியுள்ளது.

குறித்த நாய் வீதியோரத்திலிருந்த குப்பை மேட்டிலிருந்து பிளாஸ்டிக் பை ஒன்றை வாயில் கவ்விக்கொண்டு வந்து போட்டு கவனத்தை ஈர்க்க சத்தமாக குரைத்துள்ளது. இதனை அவதானித்த கம்னர்டின் மருமகனான சுடரட் (12 வயது) என்ற பையினுள் பார்த்த போது பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது.

தொடர்ந்து வைத்தியசாலைக்கு குழுந்தை கொண்டுசெல்லப்பட்டுள்ளது. பின்னர் வைத்தியர் சிகிச்சையளித்து குழந்தையைக் காப்பாற்றியுள்ளனர்.

இது குறித்து வைத்தியர்கள் கூறுகையில், குழந்தை குறைமாதத்தில் பிறந்துள்ளதுடன் நிறை குறைவாக இருக்கின்றது. இருப்பினும் குழந்தை தற்போது நல்ல நிலையிலேயே இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த பெண் குழந்தையின் பெற்றோரை இது தொடர்பிலான அதிகாரிகள் தேடிவருகின்றனர்.

இந்நிலையில் குழந்தையை காப்பாற்றிய நாயை, லெதர் பட்டி மற்றும் மெடல் ஒன்றும் அணிவித்து தா ருஆ மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம் கௌரவித்துள்ளது. மேலும் நாயின் உரிமையாளருக்கு 200 ஸ்ரேலிங் பவுண்டும் அளித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top