யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவியொருவர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
வல்லை வெளியொன்றிலுள்ள கோயில் ஒன்றிலிருந்தே தனிமையில் அழுது கொண்டிருந்த நிலையில் இம்மாணவி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். நல்லூர் பகுதியில் வைத்து இவர் கடத்தப்பட்டதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மீட்கப்பட்ட மாணவி தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கியுள்ளனர்.
இச்சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை குறித்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது தொடர்பில் எதனையும் உறுதிப்படுத்த முடியாதுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 கருத்து:
கருத்துரையிடுக