அசாம் மாநிலத்தில் உள்ள கலபீல்பஸ்தி என்ற கிராமத்தில் சூனியக்காரன் என்ற சந்தேகத்தின் பேரில் கிராம மக்கள் ஒன்று கூடி அந்த நபரை காளியின் முன் நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கிராமத்தில் தேயிலைத் தோட்ட தொழைலாளர்கள் வசித்து வந்தனர். அந்த கிராமத்தில் சில நாட்களாக பலர் திடீரென இறப்பதும், காணாமல் போவதுமான நிலைமை இருந்து வந்துள்ளது. இந்த மர்மத்தின் காரணத்தை கிராம மக்கள் ஆராய்ந்து வந்தனர்.
அதன் பிறகுதான்....இது ஒரு சூனியக்காரனின் வேலையாகத்தான் இருக்கும் என்று அவர்கள் நம்பினர். இந்த நிலையில்தான் கிராம மக்கள் சந்தேகம் ஜவகர்லால் மியூரா என்ற 55 வயது நபர் மீது ஏற்பட்டது.
கடந்த வியாழனன்று அந்த மியூராவை கிராம மக்கள் கைகளையும், கால்களையும் கட்டி தூக்கி வந்துள்ளனர். பிறகு சடங்கார்த்தமாக அவருக்கு குளிப்பாட்டி, குங்குமப் பொட்டிட்டு ஆல மரத்தினடியில் உள்ள காளி வீற்றிருந்த மேடைக்கு கொண்டு வந்துள்ளனர்.
பிறகு அவர்கள் அவனைச் சுற்றி ஆடிப் பாடியுள்ளனர். பிறகு கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருக்கையில் மியூராவை வெறித்தனமாக கொலை செய்துள்ளனர்.
பிறகு அவனது உடலைப் புதைத்தனர். செய்தி அறிந்த காவல்துறையினர் மியூராவின் உடலை எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக 3 பெண்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிராம மக்கள் அந்த மியூரா மீது கடும் கோபத்தில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இருந்தாலும் 2000 பேர் வேடிக்கைப் பார்க்க இப்படியொரு படு பாதகச் செயலைச் செய்ய எப்படி மனம் வந்தது என்று அப்பகுதியில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்து:
கருத்துரையிடுக