புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கள்ளக் காதலிக்காக மனைவியின் தங்க நகைகளைத் திருடி அவளுடன் பொலிஸில் முறையிட சென்ற கணவன் விசாரணையின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி
விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார்.
யாழ்.கோண்டாவில் பகுதியிலுள்ள குடும்பம் ஒன்று தங்களது தங்க ஆபரணங்கள் திருட்டு போய் விட்டதாக முறைப்பாடு செய்வதற்காக பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

யாழ்.பொலிஸ் நிலையத்தில் கணவன் மனைவியுமாக வந்து முறையிட வந்த இடத்தில் இவர்களது முறைப்பாட்டில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பாக பொலிஸார் துருவித்துருவி விசாரணைகளை மேற்கொண்ட போது மனைவியின் தங்க ஆபரணங்களை கணவனே திருடியது தெரியவந்துள்ளது.

திருடிய தங்க ஆபரணங்கள் நண்பனிடம் கொடுத்து வைத்துள்ளதாகவும் தனது தொலைபேசிக் காதலிக்கு கொடுப்பதற்காக மனைவியின் தங்க ஆபரணங்களைத் திருடியதாக கணவன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனை அடுத்து குறித்த தங்க ஆபரணங்கள் அனைத்தும் மீட்கப்பட்டதுடன் கணவன் எச்சரிக்கை செய்யப்பட்டதுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி மேலும் தெரிவித்துள்ளார்.
 
Top