புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று பெற்று வரும் முக்கோண போட்டித் தொடரில் இந்தியாவை எதிர்கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு விக்கெட்டினால் வெற்றி பெற்றுள்ளது.


மேற்கிந்திய தீவுகள், இலங்கை, இந்தியா ஆகிய 3 நாடுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவில் நடந்து வருகிறது.

இந்த போட்டித் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணித் தற்காலிக அணித் தலைவர் பொல்லார்ட் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்கினார்.

இதன்படி  இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஏமாற்றம் அளிக்கும் வகையில் 10 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 11 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களம் கண்ட விராட்கோலி 11 ஓட்டங்களுடனும், தினேஷ் கார்த்திக் 23 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 60 ரன்களும், சுரேஷ் ரெய்னா 44 ரன்களும் எடுத்தனர்.

இதன்படி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் நிறைவில் இந்திய அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்களை எடுத்தது.

230 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 47.3 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலங்கை அடைந்தனர்.

ஆரம்ப துடுப்பாட்டகாரராக களமிறங்கிய கெயில் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதும். சார்ளஸ் பொறுமையாக துடுப்பெடுத்தாடி 97 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். டரன் பிராவோ 55 ஓட்டங்களை எடுத்தார்.

 
Top