புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அசாமை சேர்ந்த 120 வயது குடுகுடு தாத்தா, 60 வயது பெண்ணை திருமணம் செய்தார். அசாம் மாநிலம் கரீம்கன்ஞ் மாவட்டத்தில் உள்ள சத்கோரி கிராமத்தை சேர்ந்தவர் ஹாஜி அப்துல் நூர். 120 வயது தாத்தா. இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள். மூத்த மகளுக்கே 79 வயது ஆகிறது. கூட்டுக் குடும்பமாக
மகள்கள், மகன்கள், பேரக்குழந்தைகள் மற்றும் கொள்ளு பேரக்குழந்தைகளுடன் வசிக்கிறார். அவரது குடும்பத்தில் மொத்தம் 122 பேர் உள்ளனர்.

அப்துல் நூரின் மனைவி சலிமா கடந்த 2005ம் ஆண்டு 80வது வயதில் இறந்து விட்டார். மகன்கள், மகள்கள், பேரக்குழந்தைகள் இருந்தாலும் தன்னை கவனித்து கொள்ள தனியாக ஆள் வேண்டும் என்று அப்துல் நூரின் மனம் ஏங்கியது. இதனால், 2வது திருமணத்துக்கு பெண் பார்க்க தனது மகன்களிடம் சொன்னார். வாலிப வயதில் உள்ளவர்களுக்கே பெண் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ள நிலையில், 100 வயதை தாண்டியவருக்கு பெண்ணே கிடைக்கவில்லை.

இதனால், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள திருமண தரகர்களிடம் சொல்லி வைத்தனர். இந்த நிலையில், வடக்கு திரிபுராவை சேர்ந்த சமோய் பீபி என்ற 60 வயது பெண் நூரை திருமணம் செய்ய சம்மதித்தார். அவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். அவருக்கு குழந்தைகளும் இல்லை. அப்துல் நூர்& சமோய் பீபீ திருமணம் சத்கோரி கிராமத்தில் சமீபத்தில் நடந்தது. 120 வயது தாத்தாவுக்கும்,

60 வயது பெண்ணுக்கு திருமணம் என்பதால் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் அப்துல் நூரின் குடும்பத்தினர். இதன் மூலம், உலகிலேயே அதிக வயதில் திருமணம் செய்தவர் என்ற பெருமையை அப்துல் நூர் பெற்றுள்ளார். இதற்கு முன் 103 வயதில் திருமணம் செய்த அமெரிக்கர் ஒருவர்தான் சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தார். ஆனால், அப்துல் நூருக்கு 120 வயது இருக்காது என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. வாக்காளர் பட்டியலில் அவருக்கு வயது 116 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது தவறானது, உண்மையான வயது 120 தான் என்கிறார் நூர்.

‘புது அம்மா கிடைத்து விட்டார்’

அப்துல் நூரின் மூத்த மகன் அசிருதீன் கூறுகையில், கடந்த 6 ஆண்டாக பெண் தேடி வந்தோம். இப்போதுதான் ஒரு வழியாக பெண் கிடைத்து என் தந்தைக்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. எங்களுக்கு புதிய அம்மா கிடைத்து விட்டார் என்றார். மணப்பெண் சமோய் கூறுகையில்,என் கணவரை நன்றாக பார்த்துக் கொள்வேன் என்றார்.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top