புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உலகில் மிக உயரமான பூவாக “ரைரன் அரம்” என்ற பூ வகை உள்ளது. இதன் இரசாயனப் பெயர் Amorphophallus Titanum ஆகும். ரைரன் அரம் பூ இந்தோனேசியாவின் சுமாத்திரா மழைக்காடுகளில் பூத்துக் காணப்படும் ஒரு அரிய வகைப் பூ ஆகும்.


ரைரன் மலரானது பூக்கத் தொடங்கி முதல் 10 நாட்களும் 77 சென்ரி மீற்றர் உயரமாகவும் பின்னர் 45 சென்ரி மீற்றரிலிருந்து 122 சென்ரி மீற்றர் வரை உயர்ந்து வளர்ந்து வருமாம். ரைரன் அரம் மலரானது முழுமையாக மலர்ந்த பின் அதன் மொத்த உயரமானது 7 அடி தொடக்கம் 12அடி வரை காணப்படுமாம்.

அத்துடன் ரைரன் மலரினது நிறையானது 170 பவுண்டினை (77கிலோ கிராம்) விடவும் அதிகமாகுமாம். உலகில் மிகப்பெரிய பூவாகிய “ரப்லீசியா” மலரினைப் போன்றே இந்த மலரினுடைய மணமும் சகித்துக்கொள்ள முடியாததாகும் என்பது இந்த மலரின் விசேட அம்சமாகும்.

“ரைரன்” மலரானது ஒரு தனி மலரல்லவாம், ஏனெனில் இது அதிகமான சின்னஞ்சிறிய மலர்களால் உருவான ஒரு கூட்டு மலராகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top