புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கவிஞர் டோமாஸ் டிரான்ஸ்ட்ரோமருக்கு இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் ஆழ்மனதில் உள்ள ரகசியங்களை யதார்த்தமாக வெளிப்படுத்தும் இவரது படைப்புகளுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 80 வயதாகும் கவிஞர் டோமோஸூக்கு பக்கவாதம் ஏற்பட்டு உடலின் இடது பகுதி முற்றிலுமாக செயலிழந்தது.
அவரால் பேச முடியாமலும் போனது. எனினும் தனது இலக்கியப் பணியையும், மன உறுதியையும் அவர் கைவிடவில்லை.
டோமோஸின் படைப்புகள் 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் புகழ் பெற்ற பிற மொழி கவிஞர்களால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெறும் 8 வது ஐரோப்பியர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. டோமாவின் ஸ்வீடன் பதிப்பு கமான் போனியர்ஸ் 1954 முதல் 2004 ம் ஆண்டு வரையிலான அவரது படைப்புகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. அவரது 80 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த தொகுப்பு வெளியிடப்பட்டது. 
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் பிறந்த டோமாஸின் தந்தை ஒரு பத்திரிக்கையாளர் என்பதும், தாய் ஆசிரியை என்பதும், பள்ளியில் படிக்கும் போது கவிதைகளை எழுத் தொடங்கியவர் டோமாஸ் என்பதும் தனது 23 வயதில் தனது முதல் கவிதை தொகுப்பை வெளியிட்டதும், உளவியலாளராக பணியாற்றிக் கொண்டே தனது இலக்கிய பணியை தொடர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top