புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உணர்ச்சிகளை அறியும் திறன்கொண்ட செயற்கை தோல் கண்டுபிடிப்பு!என்னதான் விஞ்ஞான வளர்ச்சியும், தொழில்நுட்ப முன்னேற்றமும் கைகோர்த்துக்கொண்டு மனித வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கினாலும், மனித சுகத்துக்காக நவீன கருவிகளை உருவாக்கினாலும், பல சமயங்களில் அது முழுமையான உணர்வை தருவதில்லை. உதாரணமாக, விபத்துகளுக்கும், பக்கவாத நோய்களுக்கும் கைகளையும்
கால்களையும் இழந்துவிடுவோர்க்கு, உற்ற நண்பனாக முயற்சிக்கும் செயற்கை கை, கால்கள் உதவுகின்றன. ஆனால் அவை இறுதியில் எதிரியாகத்தான் நிற்கின்றன. ஏனென்றால், என்னதான் செயற்கை கை, கால்கள் உதவினாலும், தொடு உணர்வை உணர முடியாதது வருத்தம் அளிக்கும் விஷயமே.

இந்த நிலையில், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு செயற்கை தோல் சோதனைக்கூடம், நானோ நரம்புகள் உதவியுடன் உணர்ச்சிகளை அறியும் திறன்கொண்ட புதிய செயற்கை தோலை உருவாக்கி இருக்கிறது. செயற்கை தோல் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டது. இருப்பினும் ஸ்டான்போர்டு சோதனைக்கூடத்தில், அதிக அளவு தொடு உணர்வை அறிந்து கொள்ளும் வகையில் நவீன செயற்கை தோலை உருவாக்கி இருக்கின்றனர். அதுவும் நானோ நரம்புகளின் உதவியுடன் என்பது தான் இதில் ஸ்பெஷாலிட்டி.

அது சரி, அதென்ன நானோ நரம்புகள்?

நீரில் மிதக்கும் கார்பன் நானோ குழாய்களை எடுத்து, ஒரு சிலிக்கான் பரப்பில் முதலில் தெளிக்கிறார்கள். பின்னர் சிலிக்கான் பரப்பினை, இருமுனைகளை பிடித்து ஒரு திசையில் இழுத்து பெரிதாக்குகிறார்கள். அடுத்தகட்டமாக, முதலில் இழுத்த திசைக்கு நேர் எதிர் திசையில் இழுக்கிறார்கள். முதல் இழுப்பில் நானோ குழாய்கள் எல்லாம் சுருள்களைப்போல சுருட்டிக்கொள்கின்றன. இதனால் அந்த சிலிக்கான் பரப்பினை எந்த திசையில் வேண்டுமானாலும் மீண்டும் மீண்டும் இழுக்கலாம். ஆனால் கிழியாமல், சுருக்கம் எதுவும் விழாமலேயே… என்பதுதான் இதில் விசேஷமே! இவைதான் நானோ நரம்புகள். அதுவும் அதிக அழுத்தத்தை தாங்கும் திறனுடன் இருப்பது சிறப்பு.

நானோ குழாய்களால் நிரப்பப்பட்ட இரு சிலிக்கான் துண்டுகளுக்கு நடுவில், மின்சாரத்தை தேக்கி வைத்திருக்கும் மற்றுமொரு சிலிக்கான் துண்டு என மொத்தம் மூன்று சிலிக்கான் துண்டுகளாலானது இந்த புதிய செயற்கை தோலின் ஒரு பகுதி. இத்தகைய செயற்கை தோலின்மீது அழுத்தம் செலுத்தப்படும்போது, இந்த கருவியின் மின்தேக்குதிறன் (ஷஹசிஹஷகூஞ்ஹஙூஷக்) அதிகமாகிறது. இதனை கணக்கிட்டால் செயற்கை தோலின்மீது செலுத்தப்படும் அழுத்தத்தின் அளவை கண்டறிந்துவிடலாம் என்று விளக்குகிறார்கள், இந்த அதி நவீன செயற்கை தோலினை உருவாக்கிய, செனான் பாவோவின் சோதனைக்கூட ஆய்வாளர்களான லிப்போமியும் அவரது ஆய்வு சகாக்களும்!

இம்மாதிரியான பல சிலிக்கான் துண்டுகளை ஒன்றுசேர்த்து, தொடு திறன்கொண்ட ஒரு அதிநவீன செயற்கை தோலினை உருவாக்கியிருக்கிறார்கள் லிப்போமியின் ஆய்வுக்குழுவினர். இந்த வகையான ஆராய்ச்சியின் பெரிய கனவு, தொடு உணர்விழந்த தோலுக்கும், ஊனமுற்றோருக்கும் புத்துணர்ச்சிïட்டுதல் அல்லது காயம்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் தீக்காயம் பட்டவர்களுக்கு மறுவாழ்வளித்தல்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top