புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கான பஸ் சேவை ஜனவரி 3 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, இ.போ. சபையின் தலைவர் எம்.டி. பந்துசேன தெரிவித்துள்ளார்.இச்சேவைக்காக இரண்டு சொகுசு வசதிகளைக் கொண்ட பஸ்கள் சேவையில்
ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்சேவையானது, காலி தரிப்பிடத்திலிருந்து ஆரம்பமாகி மஹரகம பஸ் தரிப்பிடத்தை வந்தடையும் எனவும் இதற்கான ஒரு வழிப் பயணக் கட்டணமாக ரூபா 400 அறவிடப்படும் எனவும் எம்.டி. பந்துசேன தெரிவித்துள்ளார்.

காலி நகரிலிருந்து காலை 6.00, 8.00, 10.00 மற்றும் நண்பகல் 12 மணிக்கும் மாலை 2.30 மணிக்கும் சேவைகள் ஆரம்பமாகும்.

மஹரகமவிலிருந்து காலை 6.00, 8.00 10.00 நண்பகல் 12.30 மற்றும் 2.30 மாலை 4.30 மணிக்கு பஸ் புறப்படும். காலியிலிருந்து மஹரகமவை வந்தடையும் பயணிகள் அங்கிருந்து புறக்கோட்டைக்கு வருவதற்கு விசேட இ.போ.ச. பஸ் சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இச்சேவையை போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம எதிர்வரும் 3 ஆம் திகதி மஹரகம பஸ் தரிப்பிடத்தில் ஆரம்பித்து வைக்கவுள்ளாரென்றும் இ.போ. சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top