புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நம்பினால் நம்புங்கள், நீங்கள் சாப்பிடும் தட்டின் நிறம் மாறினால் உணவும் ருசியாகும்.இதை நாம் கூறவில்லை. ஸ்பெயின், இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.அவர்கள், `ஸ்ட்ராபெர்ரி மியூஸ்’ என்ற இனிப்புப் பதார்த்தத்தை வெள்ளைத் தட்டிலும், கறுப்பு நிறத் தட்டிலும்
வைத்து சிலரைச் சாப்பிடச் சொன்னார்கள்.

அப்போது, தட்டின் நிறமானது ஒருவர் உணவை ரசித்து ருசிக்கும் விதத்தைப் பாதிப்பது உறுதியானது.

கறுப்புத் தட்டில் வைக்கப்பட்ட `ஸ்ட்ராபெர்ரி மியூஸை’ விட வெள்ளைத் தட்டில் வைக்கப்பட்டது மிகவும் ருசியாகவும், இனிப்பாகவும், தரமாகவும் இருந்ததாக அதைச் சாப்பிட்டவர்கள் கூறினார்கள். அவர்களுக்கு, வெள்ளைத் தட்டில் வைக்கப்பட்ட உணவு மிகவும் மணமாகவும் தோன்றியதாம்.

வெள்ளை நிறப் பின்னணியில் `பளிச்’சென்று உணவு தோன்றியது அவர்களை இவ்வாறு கருத வைத்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தீர்மானித்தனர்.

அவர்கள் இன்னொரு ஆய்வையும் செய்தனர். அதாவது, தட்டின் வடிவமும் உணவு குறித்த கருத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பது.

இதற்காக ஆய்வாளர்கள், தன்னார்வப் பங்கேற்பாளர்களை வட்டமான, சதுரமான, முக்கோணமான தட்டுகளில் சாப்பிட வைத்தனர். ஆனால் தட்டின் நிறத்தைப் போல இது பெரிதாகத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

பொதுவாகவே, மென்மையான, வெளிறிய பின்னணி கொண்ட தட்டு, அடர்நிறப் பின்னணி கொண்ட தட்டை விட உணவை ருசியானதாக, சிறப்பானதாகத் தோன்றச் செய்வதாக ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கண் வழியாக மூளையில் பதிவாகும் காட்சி, இந்த மாயாஜாலத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top