புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கடன் தொல்லை தாங்க முடியாமல் பெங்களூரை சேர்ந்த டாக்டர் குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷ ஊசிப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூர், சாம்ராஜ்பேட்டையை அடுத்த வால்மீகி நகரை சேர்ந்தவர் டாக்டர் அமானுல்லா கான்(60). இவரது மனைவி நவீதாபானு(50). இவர்களுக்கு அயாத் ரஷீத்(28), ஆபமா ரஷீத்(26) என்ற 2 மகன்கள் இருந்தனர். இந்த குடும்பத்தினரின் 4 மாடிகளை கொண்ட வீட்டில் வசித்து வந்தனர். வீட்டின் 2 மாடிகளில் மருத்துவமனையும், மற்ற மாடிகளில் அமானுல்லா குடும்பத்தினரும் வசித்து வந்தனர். மேலும் மைசூர் ரோடு சாமண்ணா கார்டனிலும் இன்னோரு கிளினிக் இருந்தது.

அயாத் ரஷீத் எம்.பி.பி.எஸ் படிப்பு முடித்து டாக்டராக பணியாற்றி வந்தார். அமானுல்லாவின் கிளினிக்குகளை அவரும், மகன் அயாத் ரஷீத்தும் கவனித்து வந்தனர். ஆபமா ரஷீத் கோலாரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் அமானுல்லாவின் வீட்டின் கீழ்தளத்தில் உள்ள கிளினிக்கில் வேலை செய்யும் நர்சு லட்சுமி வழக்கம் போல வேலைக்கு வந்தார். அப்போது கிளினிக் நீண்டநேரமாக திறக்கப்படாமல் இருந்தது. கிளினிக்கை திறக்க சாவியை வாங்க லட்சுமி மேல்மாடிக்கு வந்தார். அப்போது வீட்டிற்குள் இருந்த கட்டிலில் அமானுல்லா, அவரது மனைவி நவீதா பானு, 2 மகன்கள் ஆகியோர் பிணமாக கிடந்தனர். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த லட்சுமி, அக்கப்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சாம்ராஜ்பேட்டை போலீசார், 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அமானுல்லா 2 பெண் குழந்தைகளை தந்தெடுத்து வளர்த்து வந்தார். அதில் ஒருவருக்கு திருமணமாகிவிட்டது.

இன்னொரு பெண்ணாக நாசீயா(18) வீட்டின் இன்னொரு அறையில் தூங்கி கொண்டிருந்தார். நாசீயா தூங்கிய அறை வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால், அமானுல்லா குடும்பத்தினரின் தற்கொலை குறித்து அவருக்கு தெரியவில்லை.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அமானுல்லாவின் மகன்களின் படிப்பிற்காகவும், புதிய கிளினிக் துவங்கவும் ரூ. 2 கோடிக்கும் மேலாக கடன் பெற்றிருந்தது தெரிய வந்தது. குடும்பத்தினர் இறந்து கிடந்த அறையில் தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஊசிகளை போலீசார் கைப்பற்றினர். தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை.

கடன் தொகையை திரும்ப செலுத்த அமானுல்லா தனது பெரிலும், மனைவியின் பெயரிலும் இருந்த சொத்துகளை விற்றார். ஆனால் முழு கடனையும் செலுத்த முடியாமல் இறுதியில் அமானுல்லாவின் குடும்பத்தினர் விஷ ஊசியை போட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையி்ல் தெரிய வந்தது.

இது குறித்து பெங்களூர் துணை கமிஷனர் சோனியா நாரங் கூறியதாவது,

அமானுல்லா குடும்பத்தினர் கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்திருக்கலாம். அமானுல்லாவின் குடும்பத்தினர் வாங்கிருந்த கடன்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது, என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top