
அண்டத்தில் கோடான கோடி விண்மீன்களை உள்ளடக்கிய கோடிக்கணக்கான விண்மீன் மண்டலங்கள் உள்ளன என்பதைத் தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு உருவான விண்மீன் மண்டலங்களில் ஒன்றுதான் நமது கதிரவ விண்மீனை (சூரிய நட்சத்திரத்தை) உள்ளடக்கிய பால்வெளி விண்மீன் மண்டலம் (Milky way Glaxy) ஆகும். நமது இந்தப் பால்வெளி விண்மீன் மண்டலத்தில் மட்டும் நம் கதிரவன் போன்ற 20,000 கோடி விண்மீன்கள் உள்ளன. பால்வெளி விண்மீன் மண்டலத்தில் உள்ள நம் கதிரவ விண்மீன் தோன்றி இன்றைக்கு 500 கோடி ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் 600 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு நமக்கு ஒளிதந்து நம் உயிருக்கு ஆதாரமாக இருக்கும் இந்தக் கதிரவன், மூலப் பொருள் களின்றி அழிந்து போகும் என்பது அறி வியல் உண்மை! கதிரவத் துகள்களி லிருந்து உருவான நம் உலகம் தோன்றி ஏறக்குறைய 475 கோடி ஆண்டுகள் ஆகின்றது. இதுதான் உலகம் தோன்றிய வரலாறு.
உயிர் தோன்றி மனிதன் உருவான வரலாறு
0 கருத்து:
கருத்துரையிடுக