
குழந்தையை கொலை செய்து வீட்டின் பின்புறமாக குழி தோண்டிப் புதைத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கிராம மக்கள் அறிந்து கிராம சேவகருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் விரைந்து சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் குழி தோண்டிப் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தையும் அடையாளம் கண்டனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் பெ.சிவகுமார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதை அடுத்து சிசுவின் சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார். அத்துடன் குறித்த பெண்ணையும் கைது செய்ய உத்தரவிட்டார்.
சம்பவ இடத்து விசாரணைகளின் போது தனக்கு 41 வயது எனவும் நான்கு பிள்ளைகளுடன் இருப்பதாகவும் கணவருக்கு 61 வயது எனவும் குறிப்பிட்டார்.
தனக்கு போருக்கு முன்னரும் இறந்த நிலையில் குழந்தை பிறந்தபோது வீட்டின் பின் புறத்திலே அடக்கம் செய்ததாகவும் தெரிவித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக