புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருமணம் செய்து கொள்ள சொந்த வீடு இருக்க வேண்டும் என்று பெண்கள் நிபந்தனை விதிப்பதால், சீனாவில் இளைஞர்கள் பலர் தவிக்கின்றனர்.உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள சீனாவில், ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது.ஆனால், திருமணத்துக்கே
இப்போது பெண்கள் பல நிபந்தனைகள் விதிப்பது சமீபத்திய புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது. சீனாவில் சமூக சேவகர்கள் சங்கத்தின், 'மேட்ச் மேக்கிங் சர்வீஸ்' கமிட்டியும், பைஹே டாட் காம் என்ற இணையதளமும் இணைந்து 50 ஆயிரத்து 383 பெண்களிடம் கருத்து கணிப்பு நடத்தி உள்ளது. இதன் விவரங்கள் பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன.

திருமணம், உறவு முறை தொடர்பான பல கேள்விகள் பெண்களிடம் கேட்கப்பட்டன. அதற்கு, அபார்ட்மென்டில் சொந்தமாக ஒரு வீடு வைத்திருந்தால் திருமணம் செய்து கொள்வோம் என்று 70 சதவீத பெண்கள் தெரிவித்துள்ளனர்.

மாதம் 35 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தால்தான் குடும்பம் நடத்த முடியும். அதுபோன்ற இளைஞர்கள் திருமணத்துக்கு தகுதியானவர்கள் என்று 80 சதவீத பெண்கள் கூறியுள்ளனர்.

இதுபோன்ற நிபந்தனைகளால் திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் இளைஞர்கள் பலர் தவிக்கின்றனர். கடந்த 1990க்கு பிறகு பிறந்தவர்களில் 24.6 சதவீதம் பேர் (20 வயதுக்குள்), பள்ளியிலேயே காதலில் விழுந்து விடுகின்றனர் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top