புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


போலி விசா மூலம் பிரான்ஸ் செல்ல முற்பட்ட ஏழு வெளிநாட்டுப் பிரஜைகளை கட்டுநாயக்க விமான நிலைய இரகசிய பொலிஸார் கைது செய்துள்ளனர்!போலி  விசா மூலம் பிரான்ஸ் செல்ல முற்பட்ட ஏழு வெளிநாட்டுப் பிரஜைகளை இரகசிய பொலிஸார் நேற்று கட்டுநாயக்க விமான
நிலையத்தில் கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தினூடாக இவர்கள் பிரான்ஸ் தலைநகரான பெரிஸ் சென்றடைவதற்கு தயாராகவிருந்த நிலையிலேயே சி.ஐ.டியினர் இவர்களை கைது செய்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சிரியாவைச் சேர்ந்த மூன்று பெண்கள், அவர்களது இரண்டு பிள்ளைகள் மற்றும் துருக்கியைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் ஆகிய ஏழ்வருமே சி.ஐ.டி.யினரால் நேற்று கைது செய்யப்பட்டவர்களாவர்.

ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சி.ஐ.டி.யினர் சம்பவ இடத்துக்கு விரைந்து குறித்த ஏழ்வரையும் மடக்கிப் பிடித்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

கைது செய்யப்பட்டிருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் ஏழ்வருக்கும் போலி விஸா பெற்றுக் கொடுப்பதில் முன்னின்றவர்கள், உதவியவர்கள் உள்ளிட்ட வலைப்பின்னலை சர்வதேச மட்டத்தில் தேடிக் கண்டுபிடிப்ப தற்கு தேவையான நடவடிக்கைகளையும் சி.ஐ.டி. யினர் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top