புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

விரைவான தகவல் பரிமாற்றத்திற்கு இன்று பயன்படுத்தப்பட்டுவரும் மின்னஞ்சல் சேவைகளை கூகுள், யாகூ, கொட்மெயில் போன்ற பல நிறுவனங்கள் வழங்கிவந்த போதிலும் கூகுள் தான் முன்னிலையில் நிற்கின்றது.இதற்கு காரணம் ஏனையவற்றை விட வேகம் அதிகமாக
இருப்பதுடன் அதில் பல சிறப்பம்சங்களும் காணப்படுவதேயாகும்.
இதில் பலவகையான அம்சங்கள் மறைமுகமாகவும் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் படங்களை உட்புகுத்தும் வசதி.

நேரடியாக தரப்பட்டுள்ள போர்மர்ட் டூல்களை பயன்படுத்தி நாம் இதனை மேற்கொள்ள முடியாது. எனினும் மறைமுகமாக காணப்படும் இவ்வசதியை வெளிக்கொணர வேண்டும்.அதற்கு பின்வரும் முறைகளை பின்பற்றுக.
1. உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு Login ஆகி கீழே படத்தில் காட்டியவாறு Mail setting என்பதை தெரிவு செய்யவும்.


2. தோன்றும் சாளரத்தில் Labs என்பதை தெரிவு செய்யவும்.


3. தொடர்ந்து வரும் சாளரத்தில் Insert Image என்பதற்கு நேரே உள்ள Enable என்பதை தெரிவு செய்யவும்.

4. அதன் பின் கீழே உள்ள Save Changes என்பதை அழுத்தி மாற்றங்களை சேமிக்கவும்.

5. தொடர்ந்து Compose Email என்ற பகுதிக்கு சென்றதும் அங்கு படத்தை உட்புகுத்துவதற்கான பிரத்தியேகமான அம்சம் காணப்படும். அதில் அழுத்துவதன் மூலம் உங்கள் கணினியிலிருந்து புதிய படத்தினை மெயில் பகுதியில் உட்செலுத்த முடியும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top