புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தமிழின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவரான எஸ்.என்.லட்சுமி மரணமடை‌ந்தா‌ர்.தமிழின் சிறந்த நடிகைகளின் பட்டியலைத் தயா‌ரித்தால் முதல் பத்துக்குள் இடம் பிடிப்பார் எஸ்.என்.லட்சுமி. மூன்று தலைமுறை ரசிகர்களை தனது நடிப்பா‌ல் ஈர்த்த மகத்தான நடிகை இவர். வயதானர்களுக்கு சர்வர் சுந்தரம், துலாபாரம் முதலியன இவர் நடித்தப்
படங்களில் மறக்க முடியாதவை. அதேபோல் இளம் வயதினருக்கு மைக்கேல் மதன காமராஜன், மகாநதி, விருமாண்டி என கமலின் பல படங்கள். இன்றைய இல்லத்தரசிகளுக்கு பல தொலைக்காட்சி தொடர்கள்.

நகைச்சுவை, குணச்சித்திரம், ஆக்ரோஷ சண்டைக் காட்சிகள் என அனைத்திலும் அனாயசமாக நடித்த இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் வழுக்கி விழுந்த இவருக்கு முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார்.

நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர் என்.எஸ்.லட்சுமி. என்.எஸ்.கே. எம்‌ஜிஆர், சிவா‌ஜி என தமிழின் முக்கிய நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ள இவர் நடிப்பு மீதிருந்த காதலால் திருமணம் செய்து கொள்ளவில்லை. நாளை இவரது இறுதிச் சடங்கு சொ‌ந்த ஊரான ‌விருதுநக‌ரி‌ல் நடக்கிறது.


என்.எஸ்.கேவின் நாடகக் குழுவில் இணைந்து நடித்து வந்தார். பின்னர் கே.பாலச்சந்திரன் ராகினி ரீக்ரியேஷன்ஸ் உள்ளிட்டவற்றிலும் இடம் பெற்று நடித்தார். நாடகத்தில் நடித்தபோதே தனது நடிப்பாற்றலால் அனைவரையும் வியக்க வைத்தவர் லட்சுமி. பெண்களே நடித்த நாடகம் ஒன்றில் இவர் ஸ்டண்ட் காட்சிகளிலும், பல்டி அடிக்கும் காட்சிகளிலும் நடித்து அசத்தினாராம்.

சண்டையை முறையாகவும் கற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கத்திச் சண்டை பிரமாதமாகப் போடுவாராம். எம்.ஜி.ஆர் நடித்த பாக்தாத் திருடன் படத்தில் இவர் சிறுத்தையுடனும் கூட சண்டை போட்டு நடித்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவர் நடித்த முதல் படம் எது என்றால் அது நல்ல தங்காள்.

ஆனால் சர்வர் சுந்தரம் தான் இவருக்குப் பிரேக் கொடுத்த படமாகும். சர்வர் சுந்தரத்தில் இவரது பாத்திரத்தை யாரும் மறக்க முடியாது. பின்னாளில் கமல்ஹாசனின் ஆஸ்தான நடிகையாக மாறிப் போனார் லட்சுமி. தேவர் மகனில் ஆரம்பித்து விருமாண்டி வரை கிட்டத்தட்ட கமல்ஹாசனின் அத்தனைப் படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் இவர் நடித்த அந்த திருட்டுப் பாட்டி கேரக்டரை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க முடியாது. அதேபோல மகாநதியில் கமல்ஹாசனின் மாமியாராக வந்து அனைவரையும் கவர்ந்தார்.


அதேபோல மணிரத்தினமும் இவரை தனது படங்களில் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக அக்னிநட்சத்திரம் படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top