புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



  1. நீ சாகும்போது உன் தங்கையின் கண்ணீர் போகப்போக உலர்ந்து போகும். உன்னை இழந்தவளின் கண்ணீர் மற்றொருவனுடைய தோள்களில் ஓய்ந்து போகும். ஆனால் உன்னுடைய தாய் அவள் மரணம் அடைகின்ற நாள்வரை உனக்காகத் துக்கப்படுவாள்.
  2. மணிமுடி மிக கணமாக இருக்கிறது. ஒரு கிரீடத்தின் கீழே இரவிலே முத்துக்களைவிட அடிக்கடி அதிகமாகக் கண்ணீர் வழிகிறது.
  3. மற்றவர்கள் அனுபவத்திலிருந்து  கற்கின்றனர். இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். மூன்றாவது வகுப்பினர் அவ்களது சொந்த அனுபவங்களிலிருந்தோ அன்றி பிறர் அனுபவங்களிலிருந்தோ கற்பதில்லை. இவர்கள் மூடர்கள்.
  4. எவன் அஞ்சுகிறானோ அவன் மட்டுமே உண்மையான வீரன்.
  5. அதிர்ஷ்டக்காரனை நைல் நதியில் தலை கீழாகத் தள்ளினாலும் அவனுடைய வாயில் ஒரு மீனோடு வெளிவருவான்.
  6. அதிர்ஷ்டசாலியான மனிதனுடைய வழியைப் பின்தொடர்க. நீ அதிர்ஷ்ட சாலி ஆவாய்.
  7. அழுத்தத்தினாலன்றி எண்ணெய் வெளிவராது.
  8. ஒரு மூடன் தன்னுடைய வாயில் தன் அறிவைப் பெற்றிருக்கிறான். ஓர் அறிஞன் தன் வாயை அறிவால் நிரப்பி வைத்திருக்கிறான்.
  9. அறிவைத் தேடும் ஒருவருக்கு தேவதைகள் தங்களுடைய சிறகுகளை வளைத்துக் கொடுக்கின்றன.
  10. ஆரோக்கியம் உள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்.
  11. எனக்குச் செருப்புகள் இல்லை. நான் முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். பாதங்களே இல்லாத ஒரு மனிதனைச் சந்நிக்கும் வரை.
  12. உங்கள் கூடாரங்களைத் தனித்தே வைத்திருங்கள். இதயங்களை ஒன்றாக கொண்டு வாருங்கள்.
  13. அன்போடு அன்பைத் திரும்ப வழங்கு.
  14. அன்புடைமையைத் தவிர அன்புடைமைக்கு வேறு ஏதாவது கைமாறு உண்டோ?
  15. இளமையின் நினைவு ஒரு பெருமூச்சு.
  16. ஒரு பொய் அறிவுள்ளதாக இருக்கலாம். ஆனால், உண்மை அதுவே ஞானமாக இருக்கிறது.
  17. பிறப்பு மரணத்தின் தூதுவன்
  18. ஒன்றும் தெரியாத நிலையில் தனக்கு ஒன்றும் தெரியாது என்று புரிந்துகொண்டிருப்பவன் ‘சாதாரணமானவன்’. வழிகாட்டப்பட வேண்டிவன்.
  19. எல்லாம் தெரிந்த நிலையில் தனக்கு எல்லாம் தெரியும் என்ற புரிந்து கொண்டிருப்பவன் ‘புத்திமான்’ பின்பற்றப்பட வேண்டியவன்.
  20. தன் மனைவியை மதிக்காதவன் தன்னையே அவமதித்துக் கொள்கிறான்.
  21. போர்வாளே சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் திறவுகோள்.
  22. தகுதிக்கு மீறிச்செலவு செய்கிறவன் தன் உயிரை முடித்துக் கொள்ள கயிறு திரிக்கிறான்.
  23. அவன் முன்பு பனையாக இருந்தான். ஆனால், இப்போது சம்மட்டியாக இருக்கிறான்.
  24. பற்களுக்கிடையில் மனிதன் மறைந்துள்ளான்.
  25. தண்டிப்பதற்கு அதிகாரம் பெற்றிருக்கும்போது மன்னிப்பதும் ஆகிய இரு வழிகளில் விவேகம் தோன்றுகிறது.
  26. பேனாவின் வழுக்கலைவிட காலின் வழுக்கல் குறைந்த அபாயமாகவே இருக்கிறது.
  27. நரை மயிர் மரணத்தின் கடிதம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top