புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பிராமணர் என்போர் பண்டைய இந்தியாவில் நிலவிய நால் வருண முறை அல்லது நான்கு சமூகப் பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தோரைக் குறிக்கும். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய, படிமுறை இயல்பு கொண்ட, இந்த முறையில்
பிராமணர்கள் 

முதன்மை நிலையில் வைக்கப்படுகின்றனர்.  இந்து சமூக அமைப்பில், மனுநீதி என்னும் நூலில் விளக்கப்பட்டபடி, இவர்கள் வேதங்களைப் பயின்று இறை வழிபாடுகளை நடத்தும் கடமை கொண்டவர்களாக இருந்தனர். இவர்கள் அறிஞர்களாகவும் இருடிகளாகவும் அரச குருமார்களாகவும் இருந்தனர்.

வரையறை
மனு ஸ்மிருதி பிராமணர் என்பவர் யாசித்தே உண்ண வேண்டும் என்றும், நாட்டின் நலனுக்காக மன்னர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேதங்களையும் பிற கல்வி அமசங்களையும் பயிற்றுவிக்க வேண்டுமென்றும் கூறுகிறது. மேலும் பிராமணர் என்பவர் அமைதி, சுய கட்டுப்பாடு, பொறுமை, நேர்மை, அறிவு, விவேகம், சுத்தம், புனிதம் போன்ற தன்மைகளும் நிறைந்திருக்க வேண்டும்.

தொடக்கத்தில், வேதகால இந்தியச் சமூகத்தில், இந் நிலைகள் ஒருவருடைய குணம், நடத்தை, இயல்பு போன்றவற்றால் அடையப்படுவதாக இருந்திருக்கிறது. ஒருவர் அல்லது ஒரு குழுவினர் ஒரு பிரிவில் இருந்து இன்னொரு பிரிவுக்கு உயர்த்தப்படுவதும், தாழ்த்தப்படுவதும் நடைமுறையில் இருந்ததாகத் தெரிகிறது. காலப்போக்கில், இந் நிலை மரபுவழியாக அடையப்படும் ஒன்றாக மாறிவிட்டது. தற்காலத்தில் இவ் வருணமுறை கடைப்பிடிக்கப்படுவது இல்லை ஆயினும், பிராமணர்களாகத் தங்களைக் கருதிக் கொள்பவர்கள், பல்வேறு தகுதி நிலைகளிலும் உள்ள பல்வேறு சாதிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

தமிழகத்தில் ஐயர், ஐயங்கார் என இரு பிரிவுகளில் பல உட்பிரிவுகளாக உள்ளனர். சமூகநீதி இயக்கங்கள் வலுப்பெறும் வரை இவர்களது ஆளுமை அனைத்து அரசு, கல்வி மற்றும் வணிகத் துறைகளில் ஓங்கியிருந்தது. ஆனால் தற்போது இப்படியில்லை. 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top