புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வேளாளர் எனப்படுவோர் சாதீய அமைப்பில் வேளாண்மைத் தொழில் செய்து வந்தவர்களைக் குறிக்கும். இவர்கள் அனைவரும் சைவ சமயத்தையே சார்ந்துள்ளனர். இவர்கள் தங்கள் சாதிக் குறியீடாக "பிள்ளை" என்பதைக் கொண்டுள்ளனர். இந்த வேளாளர் சாதியினர்

முதலில் "சைவ வேளாளர்" அல்லது "சைவப் பிள்ளைமார்" என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் சைவமாக இருந்தாலும், இந்த சாதியிலிருந்து சில குழுவினர் அசைவ வகை உணவுகளை உண்ணும் வழக்கத்திற்கு மாறத் தொடங்கிய பின்பும், கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் பிரிந்து செல்லத் தொடங்கிய பின்பும் இச்சாதியிலிருந்து பல உட்பிரிவுகள் தோன்றின. இன்று இந்த உட்பிரிவு சாதியினரில் சிலர் புதிய சாதிப் பெயர்களில் பிள்ளை என்பதை இணைத்துக் கொண்டுள்ளனர். சிலர் வேளாளர் என்பதை இணைத்துக் கொண்டுள்ளனர். சிலர் தனிப்பட்ட பெயர்களை வைத்துக் கொண்டுள்ளனர்.

வேளாளர் விளக்கம்
வேளாளர் என்பார் வள்ளன்மையால் மிக்கிருக்கும் தாளாளராவர். வேளாண்மையாவது உழுதுண்டு வாழும் வாழ்வாகும். தாளாண்மையாவது இம்முயற்சியால் ஈட்டிய பொருளைத் தக்கார்க்குக் கொடுத்து மகிழ்வதாகும். இவ்விரு பண்புகளோடு வாய்மை குன்றா வகைமையும் இவர்கள் பால் ஆழமாக வேரூன்றி இருந்து வந்தது.

இவர்களைச் சூத்திரர் என்ற பெயராலும் குறித்து வந்தனர். 'நம்பு வாய்மையின் நீடு சூத்திர நற்குலம் செய்தவத்தினால், இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான் குடிப்பதி மாறனார்' (தி.12 பு.4 பா.1). 'தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல, நன்மை சான்ற நலம் பெறத் தோன்றினார், தன்மை வாயிலார் என்னுந் தபோதனர்' எனவரும் ஆசிரியர் திருவாக்கால் இவ்வுண்மை அறியலாம். சூத்திரர் என்னும் சொற்கு முன்னும் பின்னும் வரும் அடை மொழிகளைக் காண இச்சொல் உயர்பொருளைக் குறித்து வந்தமை அறியலாம். 'சூத்ரா சுத்த குலோத்பவா' எனச் சிவாகமமும் கூறும் என்பர். எனினும் இச்சொல் இழிநிலையில் வந்த பிறப்பைக் குறிக்கும் என்றும், மேழியர் என்பதற்கு மாறாக இச்சொல் இடைச் செருகலாய்ப் புகுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுவாரும் உளர். எனினும் ஆசிரியர் திருவாக்கின் அமைதியைக் காண இக்கருத்து மேலும் எண்ணத் தக்கதாகவே உள்ளது.

உட்பிரிவு சாதியினர்
காக்கட்டு வேளாளர் (கார்காத்தர் அல்லது கார்காத்தர் பிள்ளை)
சோழிய வேளாளர்
வீரகுடி வேளாளர்
நாமதாரிப் பிள்ளை
ஓதுவார் பிள்ளை
தேசிகர்
ஆறுநாட்டு வேளாளர்
நாஞ்சில்நாட்டு வேளாளர்
சேர வேளாளர்
சோழ வேளாளர்
நாட்டம்படி வேளாளர்
நன்குடி வேளாளர்
துளுவ வேளாளர்
பாண்டிய வேளாளர்
கொடிக்கால் வேளாளர்
தொண்டை மண்டல வேளாளர்
அரும்புக்கட்டி வேளாளர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top