புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வங்கதேசத்தில் இரு படகுகள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் இதுவரை பலியான நபர்களின் எண்ணிக்கை 116ஆக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கலாம் எனஅஞ்சப்படுகிறது.வங்கதேசத்தின் புறநகர்ப்பகுதியான முன்ஷிகஞ்ச் பகுதியில் மேக்னா ஆற்றில் இந்த விபத்து நிகழ்ந்தது. பயணிகள் படகு
நேருக்கு நேர் எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பலின் மீது மோதியது. மேற்கு ஷரியத்பூரிலிருந்து இரண்டு அடுக்குகளைக் கொண்ட பயணிகள் படகு எம்.வி. ஷரியத்புர்-1 எனும் இந்தப் படகு டாக்காவிலுள்ள சதார்கட் முனையத்துக்கு வந்து கொண்டிருந்தது.

கடந்த 13ம் திகதி அதிகாலை 3 மணியளவில் விபத்து நிகழ்ந்ததாக சம்பவ இடத்துக்கு அருகிலிருந்தவர்கள் தெரிவித்தனர். நீரில் தத்தளித்த சிலரைக் காப்பாற்றியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்களும் மீட்புக் குழுவினரோடு சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுடன் துணை இராணுவத்தினரும், கடலோரக் காவல்படையினரும் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்குள்ளான பயணிகள் கப்பல் ஆற்றின் நடுவில் 70 அடிக்குக் கீழே மூழ்கிவிட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். பயணிகள் கப்பலின்மீது எண்ணெய்க் கப்பல் மோதியவுடனேயே பயணிகள் கப்பல் மூழ்கத் தொடங்கிவிட்டது.

இதில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோருடன் பயணம் செய்ததாகத் தெரிகிறது. பயணிகள் அனைவரும் ஷாரியாபூரிலிருந்து வேலை நிமித்தமாக படகில் டாக்காவுக்கு வந்தவர்களாவர். இந்த விபத்தில் பலியான நபர்களின் எண்ணிக்கை 116ஆக அதிகரித்துள்ளது. 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர், மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top