புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வைத்தியர் ஒருவர் 50 இலட்சம் சீதனம் வாங்கி விட்டு மணப் பெண் பிடிக்கவில்லை என பெண் வீட்டரை ஏமாற்றியதற்காக குறித்த மணப் பெண் வைத்தியரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தன்னை திருமணம் முடிப்பதாக 50 இலட்சம் சீதனம் வங்கியதாக யாழ். பொலிஸில்
முறையிட்டுள்ளார்.

வைத்திய மாப்பிளைக்கு மணப் பெண் பிடிக்கவில்லை – சீதனம் வாங்கி விட்டு ஏமாற்றினார். திருமணப் பதிவைச் செய்து 50 இலட்சம் ரூபா பெறுமதியான காணியையும் பெண்ணிடம் வாங்கி விட்டு பின்னர் பெண்ணின் நடை, உடை, கலாச்சாரம் பிடிக்கவில்லை என ஏமாற்றிய வைத்திய மாப்பிளை பற்றி மணப் பெண் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

சிலாபத்தில் பணி புரியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இந்த வைத்தியர் மாப்பிளை, ஆனைகோட்டைப் பகுதியைச் சேர்ந்த 28 வயதன பெண்ணை பதிவுத் திருமணம் செய்துள்ளார்.

இவருக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான காணியும் சீதனமாக வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பில் ஆடம்பர விடுதியில் திருமணம் செய்வதற்கான செலவையும் இவர் பெற்றிருந்தார்.இந் நிலையில் இவருக்கு திடீரென மணமகளைப் பிடிக்கவில்லை. அதற்கான காரணமாக பெண்ணின் நடை, உடை, கலாச்சாரங்கள் தனக்கு சரிப்பட்டு வராது என தெரிவித்துள்ளார்.

இந்த வைத்தியர் தற்போது குறிப்பிட்ட பெண் 50 இலட்சம் ரூபா நட்டஈடு கோரி யாழ்ப்பாணப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top